பரிசோதனையில் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொண்ட ஹரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ், கொரோனாவால் பாதிப்பு
 ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின், கோவாக்சின், கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது  கட்ட பரிசோதனையில் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொண்ட ஹரியானா மாநில  சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கோவாக்சின் தடுப்பூசி, தற்போது மூன்றாவது கட்ட சோதனையில் உள்ளது. மொத்தம் 25 வேறுபட்ட பகுதிகளில், 26000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

மூண்றாவது கட்ட டிரையல் ஆரம்பித்த போது, ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ், தனக்கும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

தடுப்பூசி பரிசோதனையில், அமைச்சர் ஒருவர் பங்கெடுத்துக் கொண்டது இதுவே முதல் முறை. ஆனால், இன்று அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "எனக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது தெரியவந்துள்ளது.இதன் காரணமாக, அம்பாலாவிலுள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் நெருக்கமாக பழகியவர்கள், கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்துகிறேன். இவ்வாறு அனில் தெரிவித்துள்ளார்".       இதனிடையே, பாரத்பயோடெக் நிறுவனம், ஒரு விளக்கம் அளித்துள்ளதில், இந்தத் தடுப்பூசி 2 டோஸ் கொண்டது என்றும், அமைச்சர் முதல் டோஸ் மட்டுமே போட்டுக் கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 28 நாட்கள் இடைவெளியில், தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும், 14 நாட்கள் ஆன பிறகுதான், உடலில் நோய்எதிர்ப்பு சக்தி உற்பத்தி செய்யப்படுவது தெரியவரும் என்றும், 

இதன் காரணமாக, அம்பாலாவிலுள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா