டாக்டர் சுப்பிரமணியன்சுவாமி மீது அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை இரத்து செய்த உயர் நீதிமன்றம்

பாஜக மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன்சுவாமி மீது அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு இரத்து செய்து உயர்  நீதிமன்றம்


உத்தரவு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை 

உரிய முகாந்திரமின்றி அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகத் தெரியவந்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி, பிரதமர் நரேந்திரமோடிக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன்சசுவாமி எழுதிய கடிதம்,ஒரு தமிழ் நாளிதழ்  மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் வெளியானதில், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும்போது, இலங்கை அதிபர் ராஜபக்க்ஷேவிடம், தான் தொலைபேசியில் அழைத்துப் பேசி, மீனவர்களை விடுவிக்க வகை செய்வதாகவும், ஆனால் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா, பிரதமருக்கு  கடிதம் மட்டுமே எழுதுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததன் காரணமாக, டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் செய்தி பிரசுரிக்கப்பட்ட இரு நாளிதழ்களின் மீதும் தமிழக அரசு சார்பில் 2014 ஆம் ஆண்டு இரண்டு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.  அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி, டாகடர் சுப்ரமணியன் சுவாமி சார்பில்  2016  ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இரவி ராமசாமி, ஏற்கனவே ஒருநாளிதழ் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்கள், அவதூறு வழக்கை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசாணையை ரத்து செய்துள்ளதாக எடுத்துரைத்ததனைத் தொடர்ந்து, சுப்பிரமணியன் சுவாமி மீதான அவதூறு வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். முகாந்திரம் இல்லாத விவகாரங்களில், அவதூறு வழக்குகள் தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனத் தெரிவித்த நீதிபதி,  இனிமேல் அப்படியான வழக்குகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.              இதுகுறித்த கருத்தாக.                    டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் பதிவில் "Today Madras HC quashed all six defamation cases filed against me by the Jayalalitha government. Although JJ is no more, but still the incompetent EPS/OPS govt continued to pursue the case despite AIADMK MPs urging not to. My associate lawyer R.Ravi was brilliant today in court." எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா