திருமறைக்காடு அலையில் விதைத்த விதைகள் அலையாத்திக் காடுகள்


அலையில் விதைத்த விதைகள் அலையாத்திக் காடுகள் 

இராமாயணத்தில் இராமர் 14 ஆண்டு காலம் வன வாசத்தில் சீதை, இலக்குவனுடன் சில காலம் தண்டகாரண்யத்தில் கழித்தாரெனக் கூறுகிறது. மாரீசன் தங்க மான் வடிவில் உலாவ சீதை,  மானைப்  பிடிக்கக் கேட்டதால், இராமனும் இலக்குவனும் தங்க மானை தேடிச் செல்ல சீதை தனிமையில் இருக்க இராவணன் கவர்ந்து, இந்த ஆரண்யகத்திலிருந்து இலங்கை நுவரேலியா அசோக வனத்தில் சிறை வைத்த நிகழ்வுகள், இராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தில் கூறப்படுகிறது அப்படி ஒரு வேதம் நிறைந்த ஆரண்யம் தான்  வேதாரண்யம் அது புராண கால திருமறைக்காடு அப்பகுதியில் சுனாமி பாதிப்பு  மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் மாங்குரோவ் எனப்படும் மரங்கள்நிறைந்தது தான்  தான் அலையாத்திக் காடுகள் இதை கோடியக்கரை பகுதியில் ஆரம்பத்தில் அமைத்த புதுக்கோட்டை ரோசி பௌஃண்டேசன் நிறுவனத்துடன் புதுக்கோட்டை பகுதியை பசுமையான பகுதியாக மாற்றி வரும் மரம் அறக்கட்டளை அமைப்பும் இணைந்து கடற்கரையோரம் உள்ள படுகைகளில் அலையாத்திக்காடு உருவாக்க. விதை சேகரிப்பு ம் அது தொடர்பான தொடர்பணி கள ஆய்வும் திட்டமிடலுக்கான முதல் ஆயத்தப்பயணம் துவங்கியது.     ஒரு கோடியே 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்தியக் கடற்கரைகளில் அலையாத்தி காடுகள் உருவாகி இருக்கலாம் கடல் அலைகளால் நிலம் அரிக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதில் அலையாத்தி காடுகள் முக்கியப் பங்காற்றும். கடற்கரையில், ஆறுகளின் முகத்துவாரத்திலிருக்கும். இதில் வளரும் தாவரங்களுக்கு கடும் உவர்ப்புள்ள கடல் நீர் ஆகாது. கொஞ்சம் நன்னீரும், கொஞ்சம் கடல் நீரும் கலந்த கலவையையே  விரும்பும். இதனையே வாழ்வாதாரமாக கொண்ட நன்னீர் மீன்கள், இறால்கள், நண்டுகள், புலி, நரி, முதலை, பாம்பு, ஆமை, ஏராளமான பூச்சியினங்கள் உண்டு. அலையாத்தி காடுகளில் மட்டுமே வாழக்கூடிய 70 வகையான தாவரங்களும் உண்டு. அவை நிலத்தின் வேறெந்தப் பகுதிகளிலும் வாழாது.  பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்க ஏற்ற பாதுகாப்பான இடமாகவும்  திகழ்கிறது.பல கடல்வாழ் நுண்ணுயிரிகள் தோன்றும் இடமுமாகும்.


 அதிக அளவில் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்ச வல்லது. ஒரு ஹெக்டர் பரப்புள்ள அலையாத்தி காடு ஒரு நாளில் நூறு கிலோ அளவுக்கு கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுமாம். மேலும் நிலப்பரப்பிலிருந்து வெள்ளத்தில் கரைத்து எடுத்துவரப்படும் கழிவுகளில் உள்ள கடுமையான உலோகங்களை அலையாத்தி காடுகளில் உள்ள தாவரங்கள் உறிஞ்சி நீரை தூய்மையாக்குகின்றன. மேலும் கடல் சீற்றத்தை வெகுவாக கட்டுப்படுத்தும் திறனும் உண்டு. இது இருக்கும் இடத்தில் சுனாமி தாக்கும் என்கிற அச்சமில்லை.

அலையாத்தி காடுகள் முழுவதுமே சகதி வாய்ந்த சதுப்பு நிலமாகும். இது மனிதர்களுக்கும்,  பல்லுயிர்களுக்கும் நன்மைகளை மட்டுமே செய்கிறது. இந்தியாவில் ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் ஐரோலி, விக்ரோலி ஆகிய இரண்டு இடங்களில் அலையாத்தி காடுகள் உள்ளன. விக்ரோலியில்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய அலையாத்தி காடு உள்ளது. இதன் பரப்பளவு சுமார் 2000 ஹெக்டரில் 16 வகையான சதுப்பு நிலத் தாவரங்கள், 82 வண்ணத்து பூச்சி இனங்கள், 208 பறவை இனங்கள், 20 மீன் இனங்கள், 13 நண்டு இனங்கள், 7 இறால் இனங்கள், காட்டுப்பன்றி, குள்ளநரி, தேவாங்கு, நீர்நாய், சிறுத்தை ஆகியன வாழ்ந்து வருகின்றன.

விக்ரோலியில் உள்ள அலையாத்திக் காட்டை கோத்ரெஜ் நிறுவனம் பாதுகாக்கிறது. சதுப்பு நிலத்திலிருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் எந்த கட்டுமானமோ, விரிவாக்க பணியோ செய்யக்கூடாதென மும்பை நீதிமன்றமும் தடை விதித்துள்ளது. ஆனால் கோத்ரெஜ் நிறுவனம் சதுப்பு நிலங்களின் ஓரமாக 50 மீட்டர் தள்ளிதான். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு சிறிய வீட்டின் குறைந்தபட்ச விலை 2.8 கோடி.அலையாத்தித் தாவரங்கள் அல்லது கண்டல் தாவரங்கள் எனப்படுபவை கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில், உவர் நீரில் வளரும் தாவரங்களாகும். இவ்வகைத் தாவரங்கள் செறிந்து வளரும் இடங்களில், அவை உள்வரும் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால், இத்தகைய மரங்கள், செடிகள் நிறைந்திருக்கும் இடம் அலையாத்திக் காடு (மாங்ரோவ் காடு) எனப்படும்.கடலோரப்  பகுதிகளில், மண்ணும் நீரும் சேர்ந்த சேற்றுப் பகுதியாகவும், சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்தும் இருக்கும். சதுப்பு நிலத்தில் அலையாத்தித் தாவரங்கள் இச் சூழலிலேயே வளர்கின்றன. இதனால் இவை வளரும் இடங்கள் சதுப்புநிலக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.ஆங்கிலத்தில் இவை மாங்குரோவ் காடுகள் எனப்படுகின்றன. மலாய், எசுப்பானியம், போர்ச், சுவிசு மொழிகள் இணைந்த சிறுமரங்கள் எனப்பொருள்படும் மாங்கு என்ற சொல்லில் இருந்தே மாங்குரோவ் காடுகள் என்ற பெயர் ஏற்பட்டது.

இத் தாவரங்கள் செறிந்து வளர்ந்திருக்கும் இடத்தில் நீரானது மரங்களைச் சூழ்ந்து காணப்படுவதனால், அதாவது வெள்ளம் நிறைந்திருக்கும் இடம்போன்று தோற்றம் தருவதனால், வெள்ளக்காடு என்றொரு பெயரும் உண்டு.

முல்லையும் மருதமும் நெய்தலும் சந்திக்கின்ற திணை மயக்கமாக சதுப்புநில வனங்கள் திகழ்கின்றன. கண்டல் மரங்கள் இருக்கும் சதுப்பு நிலப்பகுதியை கண்டல் காடுகள்

இவை பொதுவாக கடலோரப் பகுதிகளில் காணப்படுவதுடன், இவை இருக்கும் இடங்களில், அலை அதிகமான கடல்நீரானது மரங்களினிடையே சென்று, அலைகள் குறையப்பெற்று, மிக மெதுவாக நகரும் ஆறுகள் போன்ற நீர்நிலையாக இருப்பதனால் இவை அலையாத்திக் காடுகள் எனவும் அழைக்கப்படும்.

கங்கையாற்றுப் படுகையில் உள்ள சுந்தரவனக் காடே உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடாகும்.தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரத்திலுள்ள அலையாத்திக் காடு உலகிலேயே இரண்டாவது பெரிய கண்டல் காடுகளாகும்.கோடியக்கரையை அடுத்த முத்துப்பேட்டை கண்டல்கள் - இவை தமிழகத்திலுள்ள கண்டல் ஈரநிலங்களில் மிகப்பெரியவை, மேலும் சென்னையை ஒட்டியுள்ள பள்ளிக்கரணையும் பல்லுயிர் வளம் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியாகும்.

குஜராத்,, ஆந்திரா மாநிலங்களின் கடற்கரைகளிலும் அந்தமான்-நிக்கோபார் தீவுகளிலும் சதுப்பு நிலக்காடுகள் உண்டு 

அலையாத்தித் தாவரங்களில் கிட்டத்தட்ட 80 வேறுபட்ட இனங்கள் இருப்பதுடன், இவை ஆக்சிசன் குறைவான மண்ணில் வளரும் தன்மை கொண்டிருப்பதாகவும், நிலநடுக் கோட்டுக்கு அண்மையாக இருக்கும், வெப்ப மண்டலம் (tropics), அயன அயல் மண்டலம் (subtropics) பகுதிகளிலேயே வளரும் என்றும் அறியப்படுகின்றது. மிகவும் கடினமான, சூழலைத் தாங்கும் தன்மை கொண்ட ஒரு சில இனங்கள் மட்டுமே மிதவெப்ப மண்டலத்தில் வாழும் தன்மை கொண்டிருக்கின்றன. இவற்றில் சிறிய செடி    வகைகள் முதல், கட்டடங்கள் கட்டுவதற்குப் பயன்படும் மரங்களான 60 மீட்டர் உயரம்வரை வளரும் மரங்கள் வரை அடங்கும் இத் தாவரங்களின் வேர்கள் நீருக்கு மேலாக அடர்ந்து தெரிவதுடன், கடற்கரை ஓரங்களில், கடலலையினால் ஏற்படக்கூடிய மண்ணரிப்பைத் தடுக்கின்றது.  அலையாத்தித் தாவரத்தில் வித்துக்கள், தாய்மரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையிலேயே முளைத்தலைக் காட்டும் படம் உண்டு.           தற்போது மேலும் நரசிங்கம் காவேரியிலிருந்து கட்டுமாவடி வரை விதைகள் போட திட்டமுடன் பணி துவங்கியது.காணொலியில் கருத்து தெரிவித்த மரம்  அறக்கட்டளை மரம் இராஜா, புதுக்கோட்டை ரோசி பவுண்டேசன் நிறுவனங்களின் சார்பில் வழக்கறிஞர் எஸ்.பழனிவேல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா