ஹேப்பி ஹாலிடேஸ்’ அனிமேஷன் டூடுள் மூலம் உலக மக்களுக்கு கூகுள் நிறுவனம் சார்பில் வாழ்த்து


கிறிஸ்துமஸ்  ‘ஹேப்பி ஹாலிடேஸ்’ அனிமேஷன் டூடுள் மூலம் உலக மக்களுக்கு கூகுள் நிறுவனம் சார்பில்  வாழ்த்து


தெரிவித்துள்ளது.

ஏசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25 ஆம் தேதி, ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்துவர்கள் கோலாகலமாக நடத்தும்  கிறிஸ்துமஸ் கொண்டாடங்கள் புத்தாண்டு வரை நீடிக்கும். இந்நிலையில் பண்டிகைகள், சிறப்பு நாட்கள் என சிறப்பாக டூடுள் வெளியிடும் கூகுள் நிறுவனம், கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களுக்காக சிறப்பாக ‘ஹேப்பி ஹாலிடேஸ்’ அனிமேஷன் டூடுளை வெளியிட்டுள்ளதில் கிறிஸ்துமஸ் பொருட்களுடன் சாண்டா காத்திருப்பது போல அனிமேஷனில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இயேசுநாதர் கலிலேய நாட்டில் வாழ்ந்த ஒரு யூதர் . திருமுழுக்கு யோவான் என்பவரிடம் திருமுழுக்கு பெற்றதைத் தொடர்ந்து நற்செய்தி அறிவிக்கும் ஊழியத்தைத் தொடங்கினார். அவர் தன் செய்தியை வாய்வழியாக அறிவித்து வந்தார்.ஆகவே அவர் பெரும்பாலும் ரபி (போதகர்) என்று அழைக்கப்பட்டார்.கடவுளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று இயேசு தன் சக யூதர்களுக்கு உவமைகள் மூலம் போதித்தார். இதனால் பல மக்கள் இயேசுவைப் பின்பற்றத் தொடங்கினர்.பிறகு யூத அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட இயேசு, உரோம அரசின் முன் நிறுத்தப்பட்டார். உரோம ஆளுநர் பொந்தியு பிலாத்து என்பவரின் கட்டளைப்படி இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.இயேசு இறந்த பிறகு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக நம்பிய அவரது சீடர்கள் இணைந்து தோற்றுவித்த சமுதாயம் பிறகு தொடக்கக்கால கிறித்தவமாக மாறியது.

இயேசுவின் பிறப்பு வருடந்தோறும் டிசம்பர் 25 ஆம் நாளன்று கிறிஸ்துமஸ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அவர் சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாகிறது. மேலும் அவர் உயிர்த்தெழுந்த நம்பப்படும் மூன்றாம் நாள் உயிர்ப்புப் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா