இந்தியாவில் கசடு மேளாண்மை கங்கா அமைப்புடன் நார்வே நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜல்சக்தி அமைச்சகம் இந்தியாவில் கசடு மேலாண்மை கட்டமைப்பை மேம்படுத்த, சி-கங்கா அமைப்புடன் நார்வே நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இந்தியாவில் கசடு மேலாண்மை கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக,  சி-கங்கா அமைப்புடன் நார்வே நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

நதிகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து, ‘இந்தியா நீர் தாக்க மாநாட்டில்’ இந்திய மற்றும் வெளிநாட்டு நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. 4-ஆம் நாள் மாநாட்டில், கங்கை நதி பாதுகாப்பு குறித்து நார்வே மற்றும் இந்திய நிபுணர்கள் ஆலோசித்தனர்.

கசடு மேலாண்மை குறித்த கூட்டத்தில் பேசிய, நார்வே நாட்டுக்கான இந்திய தூதார் டாக்டர்.பி. பால பாஸ்கர், ‘‘நதிகளில் சேறு மற்றும் கசடுகளை அகற்றுவதற்கு நார்வே நாட்டில் பின்பற்றப்படும் சிறந்த முறைகளை, நாம் இந்தியாவில் பின்பற்ற வேண்டும்’’ என கூறினார். சுற்றுச் சூழல் பாதுகாப்பில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட நார்வே விரும்புவதாக நார்வே தூதர் திருமிகு கரீனா அஸ்ப்ஜோன்சன் தெரிவித்தார்.

இந்தியாவில் கசடு மேலாண்மை கட்டமைப்பு  மேம்பாட்டுக்காக நார்வே நாட்டின்  உயிரி பொருளாதார ஆராய்ச்சி மையம், சி-கங்கா அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக நார்வே விஞ்ஞானி டாக்டர் ஓலா ஸடெட்ஜே அறிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா