கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களிடம் காணொலிக் காட்சி மூலம் விசாரணை

 கடவுச்சீட்டுக்கு (பாஸ்போர்ட்டுக்கு) விண்ணப்பித்தவர்களிடம் காணொலிக் காட்சி மூலம் விசாரணைசென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்களுக்கு காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நிலுவையில் உள்ள பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்காகவும், கொவிட்-19 நெருக்கடியால் அலுவலகத்தில் கூட்ட நெரிசலையும் தவிர்ப்பதற்காகவும் ஸ்பைப்  மற்றும் கூகுள் டியோ இணையதளங்களின்  வீடியோ அழைப்பு மூலம் மெய்நிகர் முறையிலான விசாரணைகள், இந்த அலுவலகத்தில் நவம்பர் 23ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்கள், வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கீழ்க்கண்ட ஐ.டி.யில் தொடர்பு கொள்ளலாம்:

SKYPE: Rpo chennai.

SKYPE LINK: live:.cid.1a27fe4d2074be7a

GOOGLE DUO: rpochennaipublic@@gmail.com

(b) விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே வீடியோ அழைப்பு மூலம் மெய்நிகர் விசாரணை வசதி கிடைக்கும். விண்ணப்தாரர்கள் சார்பாக வேறு யாரிடமும் விசாரணை நடத்தப்படாது.

(c) இந்த வசதி பொதுவான விசாரணைக்கு அல்ல. பாஸ்போர்ட் தொடர்பான பொது விசாரணைக்கு இலவச எண். 1800-258-1800 என்ற எண்-ஐ தொடர்பு கொள்ளவும் அல்லது rpo.chennai@mea.gov.in என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா