சர்க்கரை (சீனி) க்கான அட்டையை அரிசிக்கான அட்டையாக மாற்ற இன்று கடைசி நாள்

உணவுப்பொருள் வழங்கல் துறை சார்பில்  சர்க்கரை (சீனி) க்கான அட்டையை அரிசிக்கான அட்டையாக இணையதளம்
  (https://tnpds.gov.in/login.xhtml) வாயிலாக   மாற்றிக் கொள்ள விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர்.21 ஆம் தேதி முதல் தொடங்கி பணிகளை டிசம்பா் இறுதிக்குள் முடிக்க உணவுப் பொருள் வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது. அரிசி அட்டையாக மாற்றப்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூபாய்.2,500   வழங்கப்படும்இந்தப் பரிசு சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்வதற்கு ஏராளமானோர் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளநிலையில்  அட்டை மாற்ற இன்று டிசம்பர் 20 கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரும் ஏதிர்பாராத நிலையில் குடிமக்களுக்கு அரசு பொங்கல் பரிசை உயர்த்தி வழங்கியது சட்டமன்றத் தேர்தலுக்காக சுய நலத்திற்காக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பா என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளதற்கு, பதிலலித்த முதல்வர் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் புயலால் பாதித்த தமிழக மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது தவறா? ஏழைக் குடும்பத்தில் பிறந்த எனக்கு அவர்களின் கஷ்டம் புரியும். அதனால் தான் அவர்களது துயர்துடைக்க பொங்கல் பரிசை அறிவித்ததாக முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார் 2 கோடியே 6 லட்சம் குடும்பங்களுக்கு 2,500 ரூபாய் பொங்கல் பரிசாக மொத்தம் 5,150 கோடி அரசுக்குச் செலவாகும் 

2,500 ரூபாய் பணம் நிச்சயமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்தச் சமயத்தில் பேருதவியாக இருக்கும், ஆனால் இந்த 2,500 கொடுக்காவிட்டாலும் அவர்கள் பொங்கல் கொண்டாடத் தான் போகிறார்கள், 58 வயதில் ஓய்வு பெற வேண்டிய அரசு ஊழியர்களுக்கு ரிட்டையர்ட்மெண்ட் பணம் கொடுக்க வழி இல்லாமல் ஓய்வு பெறும் வயதை 59 என ஆக்கியது தமிழ்நாடு அரசு..

5,150 கோடி இருந்தால் அத்தனை பேருக்கும் ஓய்வு கொடுத்துருக்கலாம் என்ற ஆதங்கமும்.  வளர்ச்சிப்பணிகளுக்கான சட்டமன்ற உறுப்பினர்கள் நிதி முதல் அனைத்து பணிகளுக்குமான நிதியையும் குறைத்தாகி விட்டது (ஒரு சில அதிக கமிஷன் கிடைக்கும் பணிகளைத் தவிர),

5,150 கோடி இருந்தால் வளர்ச்சிப்பணிகளுக்கான நிதியை குறைக்க வேண்டிய அவசியம் இருந்துருக்காது எனவும், அரசாங்கத்தில் ஒப்பந்தப்பணிகளை எடுத்து வேலை செய்த ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவைத் தொகை 6 மாதங்களுக்கு மேல் பாக்கியுள்ளதாகவும்

சில துறைகளில் ஒரு வருடங்களுக்கு மேல் பாக்கி எனவும்  இதனால் பல ஒப்பந்ததாரர்கள் பணம் இல்லாமல் மேற்கொண்டு பணிகளைத் தொடர முடியாமல் திணறுவதாகவும், ஒப்பந்ததார்ரகளில் பெரிய முதலாளிகளல்ல, சிறிய நிறுவனம்  போன்றவர்கள்  சிறிய சிறிய ஒப்பந்ததாரர்கள்.

5,150 கோடி இருந்தால் ஓரளவுக்கு அவர்களுக்கான நிலுவைத்தொகையை செட்டில் செய்து விடலாம்.என்ற கூப்பாடு ஒருபக்கம்  இவையெல்லவற்றையும் விட தமிழ்நாடு அரசு ஏற்கனவே 4,50,000  கோடி வரை கடனிலிருக்கிறது,

இந்த நிதியாண்டிலும் கூட சுமார் ரூ 50,000 கோடி வரை கடன் வாங்கியுள்ளதாக உள்ள தகவல்கள்  மத்தியில் கடன் வாங்கிக் கொடுக்கிற அளவுக்கு 2,500 ரூபாய் மக்களுக்கு முக்கியமா என்றால் நிச்சயமாக இல்லை..

பணம் கொடுக்காவிட்டாலும் மக்களால் சமாளிக்க முடியும். அப்படி கண்டிப்பாக மக்களுக்கு கொடுக்க வேண்டுமென அரசாங்கம் நினைக்க மக்களும் ஒரு காரணம், ஜனங்களின் எதிர்பார்ப்புக்கு அரசும்

குடும்பத்துக்கு 2,500 ரூபாய் கொடுத்தாலவது ஓட்டு கிடைக்கும்.என்ற. இப்படி ஒரு நிலைக்கு வந்துவிட்டது.. மக்களும் இந்த இலவசங்களை  எதிர்பார்க்கிறார்கள்..

ஆனால் எல்லா மக்களும் இதை வரவேற்கிறார்கள் என எடுத்துக்கொள்ள வேண்டாம். இதனால் அவர்கள் சராசரியாக இழக்கும் தொகை அதிகம் என்பது உணரவில்லை எனத் தெரிகிறது.

பொதுநலமாக சிந்திப்பவர்கள், நாட்டு நலன் மீது நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர்கள் இந்த இலவசங்களுக்கு எதிராக குமுறிக்கொண்டு தான் இருக்கிறார்கள் காலகாலமாக, மக்களிடம்  வரிவசூல் செய்கின்றன.  எத்தனை பேர் வேறு வழியில்லாமல் குமுறிக்கொண்டு வரிகள் செலுத்துகின்றனர்.. இலவசங்களை வாரி வழங்குவதால் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இப்போது மகிழ்ச்சியாக தான் தெரியும்.. ஆனால், நடைமுறை வாழ்க்கையில் இதற்கான பாதிப்பு அவர்களுக்கும் உண்டு. பணக்காரர்கள் மட்டும் தான் வரி செலுத்துகிறார்கள் என எண்ண வேண்டாம். நாம வாங்குற ஒவ்வொரு பொருளுக்கும் GST கட்டுரோம்..

ஆகையால் வரிகட்டாதவர்கள் என்று  எவரும் இருக்க முடியாது. இப்படி மக்களிடம் கெடுபிடி செய்து பெற்ற வரி என ஆதங்கப்பட்டால் நீங்கள் ஒரு பொதுநலவாதி..2,500 ரூபாய் வழங்கிய வள்ளலே என நீங்கள் போற்றிப்புகழ்ந்தால்.. நாட்டு வளர்ச்சி மீது அக்கறை இல்லாமல் அடுத்த தலைமுறை பற்றி கவலை கொள்ளாத சாதாரண மனிதராக தான் நீங்கள் கருதப்படுவீர்கள் என புலம்பிக்கொண்டே அந்த 2,500 ரூபாய்க்கான டோக்கனை பெற நடையைகட்டும்  இந்த நடுத்தரக் குடும்பவாதிகள் நம் நாட்டில்  அதிகம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா