விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன: அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

 விவசாயத்துறை அமைச்சகம்

விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன: திரு நரேந்திர சிங் தோமர்
பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி சுமூகமான தீர்வை கண்டறியுமாறு விவசாய சங்கங்களை கேட்டுக்கொண்ட மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன என்று கூறினார்.

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம்,

ரயில்வே மற்றும் வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயலுடன் இணைந்து விவசாயிகளுக்கு கோரிக்கை வைத்த திரு தோமர், வேளாண் சட்டங்கள் குறித்த அவர்களின் கவலைகளைக் களையும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் குறித்து புது தில்லியில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் எடுத்துரைத்தார்.

சமீபத்திய வேளாண் சட்டங்கள், நாட்டின் விவசாய துறையில் இதுவரை செய்யப்பட்டதிலேயே மிகப் பெரிய சீர்திருத்தங்கள் ஆகும். இவை விவசாயிகளுக்கு சுதந்திரத்தை வழங்கி, தொழில் முனைதலை ஊக்கப்படுத்தி, தொழில்நுட்பத்துக்கான அணுகலை வழங்கி, விவசாயத்தையே மொத்தமாக மாற்றியமைக்கும்.

குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் கொள்முதல் குறித்த உறுதிகளை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர்கள் கூறினர். வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல் குழுக்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு சமமான களத்தை அமைத்துக் கொடுக்க அரசு விரும்புகிறது என்றும் அவர்கள் கூறினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா