மதுரை சுற்றுலாவிற்கு தனியார் வாடகை உலங்கு வானூர்திமதுரை மாவட்டம் மேலூர் வட்டம்  தெற்குதெரு கிராமத்தில் தனியார் நிறுவனம்  சார்பில் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களை உலங்கு வானூர்தி  மூலம் சென்று பார்த்து ரசிக்க   ஒருவருக்கு ரூபாய். ஆறாயிரம் வீதம்‌ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு தனியார்  பொறியியல் கல்லூரியும், கோவையைச் சேர்ந்த உலங்கு வானூர்தி  நிறுவனமும் இணைந்து இதற்கான தொழில்முறை சுற்றுலா வசதி  செய்து தருகின்றனர்.இந்தச் சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆறு நபர்கள் பயணிக்கக்கலாம் உலங்கு வானூர்தியில் அழகர்கோவில், ஒத்தக்கடை மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் , திருப்பரங்குன்றம், கீழக்குயில்குடியிலுள்ள தொல்லியல் புராதனச் சின்னங்களை 15 நிமிடப் பயணத்தில் கண்டு ரசிக்கும் படியுள்ளதாகவும், டிசம்பர் 29 ஆம் தேதி வரை மட்டுமே முதல்கட்டமாக இந்த தொழில் சேவை ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும், பயணிகளின் வருகையைப் பொறுத்து இந்த தொழில் சேவை நீட்டிக்கப்படும் என தனியார் நிறுவனத்தில் பணிசெய்யும்  நிர்வாகிகள் கருத்துத் தெரிவித்தனர்..நமக்கு சிறுவயதில் வாடகை சைக்கிள் கிடைப்பதே அபூர்வம் ஆனால் இப்போது பிள்ளைகளுக்கு உலங்கு வானூர்தியே வாடகைக்கு வந்தது கால விஞ்ஞான மாற்றம் தானே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா