ராஜாசர் பேரனுக்குச் சொந்தமான செட்டிநாடு குழுமம் நிறுவனங்களில் வருமானவரி சோதனைசெட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான 47 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட 47 இடங்களில் இந்தச் சோதனை நடக்கிறது.

செட்டிநாடு குழுமமானது சிமெண்ட், போக்குவரத்து, மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது. இந்த நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை 8 மணி முதல் இந்த வருமான வரி சோதனை நடத்தபட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னரும் செட்டிநாடு குழும நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு ரொக்கப் பணம், நகைகள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்படன,வரி ஏய்ப்புப் புகாரைத் தொடர்ந்து இந்தச் சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை, கரூர், காஞ்சிபுரம், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட 47 இடங்களில் 200 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு  ஜூன் 11 அன்று 

செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான  இடங்களில் முன்பு  சென்னை, கரூர், காஞ்சிபுரம், ஐதராபாத், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் 200 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.சென்னை, ஹைதராபாத், மும்பை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள செட்டிநாடு குழுமத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.இந்த சோதனை எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா தலைமையிலான செட்டிநாடு குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு சொத்துக்களை வருமான வரி (ஐ.டி) துறை தேடி வருகிறது. வரிவிதிப்பாளர்களின் கூற்றுப்படி, சென்னை உள்ளிட்ட 47  இடங்கள் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகள் இப்போது ஸ்கேனரின் கீழ் உள்ளன. “ஒரு பெரிய வரி ஏய்ப்பு என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். இது ஒரு பெரிய குழு, எனவே தேடல்கள் முடிவடைய 2-3 நாட்கள் ஆகும் ”என்று தகவல் தொழில்நுட்பத் துறையின் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னையிலிருந்து தலைமையிடமாக உள்ள 90 ஆண்டுகளுக்கும் மேலான செட்டிநாடு குழுமம் கட்டுமானம், சிமென்ட், மின்சாரம், எஃகு புனையல், உடல்நலம், நிலக்கரி முனையம், போக்குவரத்து உள்ளிட்ட பல வணிகங்களைக் கொண்டுள்ளது. மேலும் விவரங்கள் பிற்பகுதியில் பகிரப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செட்டிநாடு குழுமங்களின் தலைவராக இருந்த எம்.ஏ.எம்.ராமசாமிக்கும் அவரது சுவீகார மகன் அய்யப்பனுக்கும் இடையே அவர் காலமாகும் முன் பெரும் மோதல் நடந்து வந்தது. அதில் பலர் மத்தியஸ்தம் செய்து வந்த சூழ்நிலையில் செட்டிநாடு சிமென்ட்ஸ் நிறுவன தலைவர் பதவியை தக்க வைப்பதற்காக கம்பெனி பதிவு சட்ட பதிவாளருக்கு எம்.ஏ.எம்.ராமசாமி உயிருடன் இருந்த காலத்தில் லஞ்சம் கொடுப்பதாக ஒரு ரகசியத்தகவல் சி.பி.ஐ., போலீசாருக்கு அப்போது தரப்பட்டதைத் தொடர்ந்து சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள செட்டிநாடு அரண்மனையிலிருந்து காரில் வெளியே வந்த கம்பெனி பதிவாளர் மனுநீதிச்சோழனை சி.பி.ஐ., போலீசார் கைதும் செய்தனர்.

கம்பெனிப் பதிவாளர்  காலம்சென்ற எம்.ஏ.எம்.ராமசாமியை செட்டிநாடு அரண்மனையில் சந்திக்கும் தகவலை அவரது சுவீகார மகன் அய்யப்பன் குழுவினர் தான் சி.பி.ஐ.,க்கு தெரிவித்தனர் என எம்.ஏ.எம்.ராமசாமி தரப்பில் அவரது உறவினர்களால் கூறப்பட்டது.தற்போது செட்டிநாடு சிமென்ட்ஸ் நிறுவன நிர்வாகத்தில் இருக்கும் அய்யப்பன் பல ஆண்டுகளாக வருமான வரியை செலுத்தாமல் ஏமாற்றி வருகிறார் என எதிர்தரப்பினர் வருமான வரித் துறைக்கு தகவல் கொடுத்ததால் தான் இந்த அதிரடிச் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது 'செட்டி நாடு குழும குடும்ப சண்டைக்கும் சோதனைக்கும் தொடர்பில்லை. கணக்குகளை ஆய்வு செய்து வருமான வரி ஏய்ப்பு பற்றி தெரிய வந்ததை தொடர்ந்தே சோதனை நடத்தப்பட்டது' என்றனர். காலம்சென்ற எம்.ஏ.எம்.ராமசாமிக்கு உறவினர்கள் மற்றும் சுவீகார மகன் அய்யப்பன் தரப்பினர் ஏற்கனவே பரஸ்பரம் குற்றம்சாட்டி பேட்டி அளித்த சமயத்தில் நடந்துள்ள வருமான வரி சோதனையும் தற்போது நடந்த சோதனையும்  செட்டிநாடு குழுமத்துக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாகப் பார்க்கப்படுகின்றன. .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா