மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப்புக்கு பிரதமர் உள்துறை அமைச்சர் மரியாதை

 பிரதமர் அலுவலகம் சார்பில் மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் மரியாதை


பிரதமர் திரு நரேந்திர மோடி, மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “மகாபரிநிர்வாண் தினத்தன்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களை நினைவு கூருகிறேன். அவரது எண்ணங்களும், லட்சியங்களும் கோடிக்கணக்கானோருக்குத் தொடர்ந்து வலிமையைத் தருகின்றன. நமது தேசம் குறித்து அவர் கொண்டிருந்த கனவை நிறைவேற்ற நாம் உறுதி பூண்டுள்ளோம்”, என்று தெரிவித்துள்ளார்.             உள்துறை அமைச்சகம் சார்பில் 

மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு டாக்டர் அம்பேத்கருக்கு அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு பாரதரத்னா பாபாசாகேப் டாக்டர் பி ஆர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

“தேசத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வளர்ச்சி, வளம் மற்றும் சமத்துவத்தை வளர்க்கும் நோக்கத்தில் அனைத்தையும் உள்ளடக்கிய அரசியலமைப்பை வடிவமைத்த பாபாசாகேப் அவர்களை மகாபரிநிர்வாண் தினத்தன்று நான் வணங்குகிறேன். பாபாசாகேப் அவர்களின் காலடி தடத்தைப் பின்பற்றி, பல தசாப்தங்களாக வளர்ச்சித் திட்டங்கள் சென்றடையாத ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நல்வாழ்விற்காக திரு மோடி தலைமையிலான அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது”, என்று திரு அமித் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா