ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமணையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிஇரத்த அழுத்தத்தில் பெரிய மாறுபாடு காரணமாக   ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தத்தில் பெரிய அளவுக்கு மாறுபாடு இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக அப்பல்லோ நிர்வாகம்  தெரிவித்துள்ளது. தற்போது அவர் உடல்நிலை சீராக இருப்பதாக மாலையில் அப்பல்லோ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ்  அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற ரஜினிகாந்த். குழுவைச் சேர்ந்த சுமார் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், உடனடியாக சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து ரஜினிகாந்த்துக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது

காலை திடீரென ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை. இரத்த அழுத்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிக அசதி ஏற்பட்டுள்ளது. என அப்பல்லோ மருத்துவமனை  நிர்வாகம் மதியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இன்று காலை ரஜினிகாந்த் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் அவர் பங்கேற்றிருந்தார். அங்கு உடன் பணியாற்றிய சிலருக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த 22ஆம் தேதி ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. இதன் பிறகும் அவர் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார். ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த அழுத்தத்தில் பெரிய அளவுக்கு மாறுபாடு இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக அப்பல்லோ தெரிவித்துள்ளது. தற்போது அவர் உடல்நிலை சீராக இருப்பதாக மாலையில் அப்பல்லோ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த சுமார் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், உடனடியாக சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா