பாங்காக்கில் இந்திய உணவுப் பொருள் ஊக்குவிக்கும் பிரச்சாரம்வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவின் சுவை என்னும் பிரச்சாரம் பாங்காக்கில் செய்யப்பட்டது

இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக, 'இந்தியாவின் சுவை' என்னும் பிரச்சாரம் பாங்காக்கில் செய்யப்பட்டது.

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு நமது நாட்டின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதியை விரிவாக்கும் நோக்கில், வாங்குவோர் விற்போர் கூட்டத்தை  வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் நடத்தியது.

2020 டிசம்பர் 21 அன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில், இரு நாட்டு அரசுகள் மற்றும் வர்த்தகத் துறைகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

வேளாண் மற்றும் உணவு துறையில் இந்தியா மற்றும் தாய்லாந்துக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான பொதுவான தளத்தை இந்த கூட்டம் வழங்கியது.

காணொலி மூலம் நடைபெற்ற இந்த கூட்டம், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் பல்வேறு நாடுகளுடன் நடத்தி வரும் நிகழ்ச்சிகளின் வரிசையில் பதிமூன்றாவது ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா