டில்லி சென்னை விமான நிலையங்களில் பல கோடி மதிப்புள்ள ஹெராயின் உள்ளிட்ட. பொருள் கடத்தி வந்த 2 வெளிநாட்டினர் கைது

நிதியமைச்சகம் தகவல் படி டில்லி விமான நிலையத்தில் ரூ.68 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தி வந்த 2 வெளிநாட்டினர் கைது
டில்லி விமான நிலையத்தில் ரூ.68 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தி வந்த 2 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

தோகா வழியாக டில்லி விமான நிலையம் வந்த உகாண்டாவை சேர்ந்த இருவரிடம், சுங்க அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். அவர்கள் கொண்டு வந்த பைகளில் 51 பொட்டலங்களில் 9.8 கிலோ அளவில் வெள்ளை நிற பவுடர் இருந்தது. அதை பரிசோதித்தபோது, ஹெராயின் என உறுதி செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.68 கோடி. இந்திய விமான நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய ஹெராயின் கடத்தல் இது.

இவர்கள் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் சுங்கச் சட்டத்தின் கீழ் சுங்க அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


இதேபோல் சென்னையில்

ரூ.1.75 கோடி மதிப்புள்ள 3.46 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.75 கோடி மதிப்புள்ள 3.46 கிலோ தங்கம், சிகரெட்டுகள், பயன்படுத்திய லேப்டாப் ஆகியவற்றை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

உளவுத் தகவல் அடிப்படையில், துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த கடலூரைச் சேர்ந்த சையத் முஸ்தபா, அசாருதீன், அஜ்மல் கான், சையது முகமது, சுல்தான் சலாஹூதீன் ஆகிய 5 பேரிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இவர்கள் 18 தங்க பசை பொட்டலங்களை அவர்கள் தங்களது உடலில் மறைத்து வைத்திருந்தனர். 3.66 கிலோ தங்க பசையிலிருந்து 3.26 கிலோ தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு 1.65 கோடி.

மேலும் இவர்கள் 204 கிராம் எடையில், 6 தங்க துண்டுகளை, தங்கள் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்தனர். இவற்றின் மதிப்பு 10.3 லட்சம்.

பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தங்கத்தின் எடை 3.46 கிலோ. இவற்றின் மதிப்பு 1.75 கோடி. இவர்கள் கொண்டு வந்த பைகளை சோதனை செய்த போது, அதில் 75, குடாங் கரம் சிகரெட் பாக்கெட்டுகள், 14 பயன்படுத்தப்பட்ட லேப்டாப்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.2.5 லட்சம். 

இந்த பொருட்களை சட்டவிரோதமாக கடத்தி வந்த 5 பேரும் கைது செய்யப்பட்டதாக, சென்னை சர்வதேச விமானநிலைய சுங்க ஆணையர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.        மற்றொரு மீட்பில்

ரூ 40.12 லட்சம் மதிப்புடைய தங்கம் மற்றும் கைபேசிகள் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல்

விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த தகவலை தொடர்ந்து, எமிரேட்ஸ் விமானம் ஈகே-544 மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த ராவுத்தர் நைனா முகமது, 50, மற்றும் இப்ராகிம், 46, ஆகியோர் வெளியே செல்லும் வழியில் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டனர்.

அவர்களை சோதனையிட்ட போது, ரூ 27.77 லட்சம் மதிப்புடைய 545 கிராம் தங்கத்தை பசை வடிவில் 4 பொட்டலங்களாக உடலுக்குள் மறைத்து வைத்து கொண்டு வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சோதனையிட்டபோது, 11 தங்க துண்டுகளும், ஒரு தங்க தட்டும் அவர்களது கால்சட்டைப்பை மற்றும் கைப்பைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. 160 கிராம் எடையிலான இவற்றின் மதிப்பு ரூ 8.15 லட்சம் ஆகும்.

மொத்தம் 705 கிராம் எடையுடைய ரூ 35.92 லட்சம் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களது பைகளை சோதனையிட்ட போது, ரூ 4.2 லட்சம் மதிப்புடைய மூன்று ஐ-போன் புரோ மற்றும் மூன்று சாம்சங் கேலக்சி கைபேசிகள் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆக மொத்தம் 705 கிராம் எடையுடைய தங்கமும், ஆறு கைபேசிகளும் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ 40.12 லட்சம் ஆகும்.

இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்தி குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்