முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டா சிங் காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான   பூட்டா சிங் காலமானதாக


அவருடைய மகன் பதிவு செய்துள்ளார். பூட்டா சிங் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார்.  வயது 86. அரசியல்  பொதுவாழ்க்கையில் 8 முறை எம்.பியாகவும் , 4 பிரதமர்களின் ஆட்சியில் அமைச்சராகவும், பல முக்கியப் பொறுப்பிலும் இருந்தவராவார், முதுமை  காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட பூட்டா சிங், 2021 அக்டோபர் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனையில் கோமாவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில்  இன்று காலை 7.10 மணிக்கு காலமானார். இன்று மாலை டெல்லி லோதி சாலையில் உள்ள இடுகாட்டில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

பூட்டா சிங் மறைவு குறித்து குடியரசுத் தலைவரின் ட்விட்டரில் பதிவு இரங்கல் செய்தி,: சிறந்த நிர்வாகத்திறன் கொண்ட, நீண்டகாலம் எம்.பி.யாக இருந்த பூட்டா சிங்கை தேசம் இழந்துவிட்டது.ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களுக்காக குரல்கொடுத்தவர் பூட்டா சிங். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவிக்கிறேன்” எனவும்

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவு இரங்கல் செய்தி “பூட்டா சிங் மிகச்சிறந்த அனுபவம் கொண்ட நிர்வாகி, ஏழை மக்கள், விளிம்புநிலை மக்களின் நலனுக்காக ஆக்கப்பூர்வமாகக் குரல் கொடுத்தவர். அவரின் மறைவு வேதனையளிக்கிறது. அவரின் குடும்பத்தாருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள்” எனவும்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவில்                 “ விசுவாசமான தலைவரையும், மக்களுக்கு உண்மையாக சேவையாற்றியவருமான பூட்டா சிங்கை இந்த தேசம் இழந்துவிட்டது. தனது வாழ்க்கையையே இந்த தேசத்துக்காகவும், மக்களின் நலனுக்காகவும் அர்ப்பணித்தவர் பூட்டா சிங். அவரை என்றென்றும் நினைவு கூர்வோம். இந்தத் துயரமான நேரத்தில் அவரின் குடும்பத்தாருக்கு எனது வருத்தங்களைத் தெரிவிக்கிறேன்”எனவும் மேலும்

மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி, குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பூட்டாசிங்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் 1934 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  21 ஆம்தேதி பிறந்து 1962 ஆம் ஆண்டில் முதலில் ராஜஸ்தானின் ஜலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து  தேர்ந்தெடுக்கப்பட்டார். சிரோன்மணி அகாலிதளம் கட்சியிலிருந்த  பின் காங்கிரஸ் கட்சிக்கு 1960 ஆம் ஆண்டில் மாறி ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுத்த மிகப்பெரிய தலைவர்  காங்கிரஸ் கட்சியில் தாழ்த்தப்பட்டோருக்கான பிரிவை 1973-74களில் உருவாக்கிய பூட்டாசிங் 1978 ஆம் ஆண்டில்  பொதுச்செயலாளர்

கடந்த 1974 ஆம் ஆண்டில் இரயில்வே இணையமைச்சராக  நியமிக்கப்பட்டபின் 1976 ஆம் ஆண்டில் வர்த்தக இணையமைச்சர் பின்பு 1980 ஆம் ஆண்டில் கப்பல் மற்றும் போக்குவரத்து துறை இணையமைச்சர் 1982 ஆம் ஆண்டில் விளையாட்டுத்துறை அமைச்சர்.

முன்னால் பிரதமர் இந்திரா காந்திக்கு நெருக்கமானவராக 1983 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக உயர்ந்தார். பின் 1984 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி அமைச்சர் என உயர்ந்தார். ராஜீவ் காந்தி பிரதமரான காலத்தில்  உள்துறை அமைச்சராகவும்.

பி.வி.நரசிம்ம ராவ் பிரதமரான போது, நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சராகவும் 1995 முதல் 1996 வரை  இருந்தார். மன்மோகன் சிங் ஆட்சியில் 2007 ஆம் ஆண்டில் தேசிய பட்டியலினத்தவர்களின் ஆணையத் தலைவராகவும், 2010 ஆம்  ஆண்டு வரை இருந்தார்.

1984 ஆம் ஆண்டு அமிர்தரஸ் பொற்கோயிலில் ப்ளூஸ்டார் ஆப்ரேஷனுக்குப்பின் கோயிலை சீரமைக்கும் குழுவுக்கும், பல்வேறு குருதுவாராக்களை சீரமைக்கும் குழுவுக்கும் தலைவராக  இருந்தார். டெல்லி சீக்கிய கலவரத்துக்குப்பின் பல குருதுவாராக்களை சீரமைத்ததில்  முக்கியப் பங்கு வகித்தவர்.

காங்கிரஸ் கட்சி 1978-ம் ஆண்டு இரண்டு பிரிவாக உடைந்தபின், காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னத்தைத் தேர்வு செய்த குழுவில் பூட்டா சிங் பங்கு  முக்கியமானவர். 1998-ல் தகவல்தொடர்பு துறை அமைச்சராக பூட்டா சிங் இருந்தபோது ஜேஎம்எம் ஊழல் வழக்கு காரணமாக  பதவியை ராஜினாமா செய்தார். 2005 ஆம் ஆண்டில் பிஹார் ஆளுநராக பூட்டா சிங் நியமிக்கப்பட்டபின், ஆட்சியைக் கலைக்க பரி்ந்துரை செய்ததால் உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சிக்கவே பின் பதவியை  இராஜினாமா செய்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...