போதைமருந்து உட்கொள்வதை எதிர்க்கும் குறிப்பேட்டை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டார்


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் போதைமருந்து உட்கொள்வதற்க்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள குறிப்பேட்டை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ வெளியிட்டார்

தேசிய போதைமருந்து பரிசோதனை ஆய்வகம் மற்றும் தேசிய மருந்துகள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம், கவுகாத்தி ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள போதைமருந்து ரசாயன பரிசோதனையில் பயன்படுத்துவதற்கான முதல் குறிப்பு கையேட்டை மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ வெளியிட்டார்.

உலகளவில் அரிதான இந்த கையேட்டை, சர்வதேச போதை மருந்து தடுப்பு முகமையால் சான்றளிக்கப்பட்ட அனைத்து ஆய்வகங்களிலும் பயன்படுத்துவதன் மூலம், போதைமருந்து பயன்பாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை மேம்படுத்தலாம். ஆய்வகங்களின் பரிசோதனை திறனை இது மேம்படுத்தி, விளையாட்டு போட்டிகள் நேர்மையாக நடப்பதற்கு உதவும்.

“இது நம் அனைவருக்கும் ஒரு சிறப்பான தருணம். இதன் மூர்த்தி சிறிது, ஆனால் கீர்த்தி பெரிது. ஏமாற்றுதல் ஏதும் இல்லாமல் விளையாட்டுகள் நடத்தப்பட வேண்டும். இந்த கையேட்டை தயாரித்த அனைத்து விஞ்ஞானிகளையும் நான் பாராட்டுகிறேன்,” என்று திரு ரிஜிஜூ கூறினார்.

“இந்த கையேடு இலவசமாக விநியோகிக்கப்படும். இதன் மூலம் அதிகளவில் நன்மதிப்பு ஏற்படும். யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் நமது பாரம்பரியத்திற்கு ஏற்ப நாம் செய்து வரும் செயல்களில் பெருமை கொள்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்