சமஸ்தானத்தை இணைத்து ஒரே தேசம் கண்டு குடியரசாக மலர்ந்து பறந்த தேசியக்கொடி
இந்திய அரசியலமைப்பினை 1947 ஆம் ஆண்டு  நவம்பர் 4 ஆம் தேதி  அரசியலமைப்புச் சட்டம் அவையில் சமர்ப்பித்தது.

2 ஆண்டுகள்,11 மாதங்கள், 166 நாட்கள் பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்று முடிவாக ஜனவரி மாதம் 24 ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்புச் சட்டம்  கையெழுத்திடப்பட்டது.

அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950 ஆம் ஆண்டில், விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26 ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட பிரதமர்  ஜவகர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்து அறிவித்துச் செயல்படுத்தியது.

1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது

கொடி ஏற்றம் என்பது 

ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கொடியை ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே கயிற்றால்  இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும் அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும்  நிகழ்வு கொடியேற்றம் எனப்படுகிறது.,

ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று

கொடி கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும். அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு அதாவது கொடி  திறக்கப்பட்டு பறக்கவிடப்படும்  இதை 

கொடியைப்பறக்கவிடுதல்  எனலாம்.

சுதந்திரம் கிடைத்த போது அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வரவில்லை. அப்பொழுது பிரதமர் தான் நாட்டில் முதல் மனிதராகக் கருதப்பட்டார். குடியரசுத் தலைவர் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. அதுவரை ஆங்கிலேயரான மவுன்ட்பேட்டன் தான் வைசிரய் அந்தஸ்தில் இருந்தார்  இதனால் சுதந்திர தினத்தில் பிரதமர்  கொடி ஏற்றுகிறார். குடியரசுத் தலைவர் மாலையில் வானொலி மற்றும்  தொலைக்காட்சி மூலமாக உரையாற்றுவார்.

குடியரசு தினத்தன்று அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தபடியால்  அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசுத்தலைவர் கொடியை பறக்கவிடுவார்..

சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றப்படுகிறது.

குடியரசு தினத்தன்று டில்லி ராஜ்பாத்தில் கொடி பறக்கவிடப்படுகிறது.        தேசத்தை 600 க்கும் மேற்பட்ட  பல சமஸ்தானங்களை ஒன்று சேர்ந்து அதன் பெருமை மிகு தலைவர் இரும்புமனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவரைப் பாராட்டும் விதமாக இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் ஆளுநர் மாளிகை உள்ள சாலைக்கும் சர்தார் பட்டேல் சாலை என இப்போது பெயர் உண்டு. அதுவே தேசத்தின் ஒற்றுமை பலம் இந்திய ஜனநாயகக் குடியரசு இரும்பு மனிதர் பெற்ற வெற்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்