வன்முறையில் காயமடைந்த காவலர்களை மருத்துவமனைகளுக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் நலம் விசாரித்தார்.

உள்துறை அமைச்சகம் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த காவலர்களை மருத்துவமனைகளுக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் நலம் விசாரித்தார்.


குடியரசு தினத்தன்று நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த துணிச்சல் மிகு தில்லி காவலர்களை மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று நலம் விசாரித்தார்

சுஷ்ருதா மருத்துவ மையம் மற்றும் தீரத்ராம் மருத்துவமனைக்கு சென்ற திரு அமித் ஷா, அங்கு சிகிச்சை பெற்று வரும் காவலர்களை சந்தித்து, அவர்களின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

“தில்லி காவல் துறையின் தீரமிகு காவலர்களை இன்று மருத்துவமனையில் சந்தித்து, அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினேன். குடியரசு தினத்தன்று நடைபெற்ற வன்முறையில் அவர்கள் காட்டிய துணிச்சலையும், உறுதியையும் கண்டு ஒட்டுமொத்த நாடும் பெருமையடைகிறது,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் உள்துறை அமைச்சர் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்