தமிழகத்தில் மொழிப்போரும் காலம் கடந்ததன் வீழ்ச்சியும் இது மொழி அரசியல்

சுதந்திர இந்தியாவின் முதல்

பிரதமரான ஜவகர்லால் நேரு சட்ட வரைவைக் கொண்டு வந்து  ஆங்கிலம் தொடரலாம் என்கிற வார்த்தையை, கண்டிப்பாகத் தொடரும் என மாற்றச்சொல்லிக் கேட்ட தமிழர்கள் shall be எனும் வார்த்தையை போட்டுவிட்டு ஆங்கிலத்தை ஆட்சி மொழியாகத் தொடரலாம் எனுமிடத்தில் may be எனப் போட்டதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. நேரு தொடரலாம் என சொன்னதை தொடராமலும் போகலாம் என அடுத்து  வருகிறவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என பயந்தார்கள் அதுபோல் 15 ஆண்டுகள் முடிந்து போன நிலையில், 1965 ஆம் ஆண்டு பிரதமரான நேருவின் மறைவுக்குப் பின் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இந்தியை ஆட்சி மொழியாக்கச் சட்டம் இயற்றவே மீண்டும் மொழிப்போர் துவங்கியது. அப்போது மதராஸ் மாகாண முதல்வர் பக்தவத்சலமும் ஆதரிக்கத் தமிழக இளைஞர்கள் கொதித்துப் போனார்கள். வீறுகொண்டு எழவே அப்போது தான் மொழிப்போராட்டம். தற்போது  கொள்கையின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் மாநில ஆட்சி மொழியாகிய தமிழை அறிமுகப்படுத்திட தமிழக அரசு முடிவெடுத்ததைச் செயல்படுத்த விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டுமென இந்தியக் குடியரசுத் தலைவரைக் கேட்டுக்கொள்வதென தமிழக சட்டப் பேரவையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறதென 6.டிசம்பர் 2006 ஆம் ஆண்டில் அப்போதய திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இத் தீர்மானம் நிறைவேறி 14 ஆண்டுகள் கடந்தநிலையிலும் இன்னமும் நடைமுறைக்கு வராமல் தீர்மானம் உடனே  குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு. நாடாளுமன்றம்  குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பியது. அப்போதய தலைமை நீதிபதி கேரளத்தைச் சேர்ந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் இக் கோரிக்கையை ஏற்க மறுத்தார். தமிழ்நாட்டின் சட்டப்பேரவைத் தீர்மானம் நிறைவு பெறவில்லை நிலுவையில்  உள்ளது. தமிழக அரசு  மீண்டும் நினைவூட்டியும் பலன் வரவில்லை.

திமுக ஆட்சியின் இறுதியில் 2010 ஆம் ஆண்டில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மதுரையிலும், சென்னையிலும் 25 வழக்குறைஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதமிருந்தார்கள். போராட்டம் தமிழகம் முழுவதும் பரவாமல் அதைக் கட்டுப்படுத்தும் விதமாக வழக்கறிஞர்கள் விரும்பினால் நீதிமன்றங்களில் தமிழில் வாதாடலாம் என்று அப்போதைய தலைமை நீதிபதி வாய்மொழி உத்தரவிட்ட பின் ஒன்றிரண்டு வழக்குகள் தமிழில் நடந்தன ஒத்துழைப்பு கிடைக்காததாலும், தமிழில் வாதாடிய காரணத்திற்காகவே ஒரு வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்ததாலும் அந்த நடைமுறை வழக்கொழிந்து போனது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் உள்ளிட்ட அனைத்து தமிழாகும் நாள் வரவேண்டும் என்பதே நமது விருப்பம். லால்பகதூர்  சாஸ்திரி பிரதமராக இருந்த காலத்தில்  கட்டாய ஹிந்தியை அறிமுகப்படுத்தியதால் தமிழகம் கொதித்தெழுந்தது . 70 பேர் அதிகாரப்பூர்வ பதிவுகளின் படி தீக்குளித்தனர், ஐம்பாதாயிரம்  மாணவர்கள் ஊர்வலம் போனார்கள் ; கலவரங்கள் வெடித்து பாரா மிலிடரி படைகள் வந்தன. பக்தவச்சலம் முரண்டு பிடித்தார் .ஒ.வி.அழகேசன் மற்றும் சி.சுப்பிரமணியம் ஆகியோர் பதவி விலக அதை லால் பகதூர் சாஸ்திரி ஏற்றார் ; பின் ஜனாதிபதி டாக்டர்  ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பிரிய வழி வகுக்காதீரெனச் சொன்ன பின் ஹிந்தி திணிப்பு நின்றது. தேர்வுகளில் ஆங்கிலமுமிருக்குமென அறிவித்தார்கள் .மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வந்தார்கள். அதை எதிர்த்தும் தமிழகத்தில் போராட ஹிந்தி கற்கிற வாய்ப்புப் பறிபோனது. 1986 இல் நவோதயா பள்ளிகள் தமிழகம் வரும்பொழுது அதை ஹிந்தி திணிப்பு என அப்போது முதல்வர்  எதிர்த்து போராட்டம் நடத்த இந்தியாவிலேயே நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடானது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஹிந்திக்கான கால அளவை அதிகப்படுத்துவது, மொரார்ஜி தேசாய் காலத்தில் துணை கமிஷனர் அல்லது அதற்கு மேலான பதவியில் உள்ள ஹிந்தி கற்காத மாநில அதிகாரிகள் கட்டாயம் ஹிந்தி கற்க வேண்டும் என்று உத்தரவு போட்டது,. ராஜீவ் காந்தி காலத்தில் ஹிந்தி வாரம் கொண்டாட வேண்டும் என்று அறிக்கையும் வந்தது,     மத்திய அரசு அதிகாரிகள் ஹிந்தியிலேயே கையெழுத்து போடவேண்டும் என்கிற உத்தரவு, என்.சி.ஆர்.டி. புத்தகங்களில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராடியவர்களை முட்டாள்கள் என்று சித்தரித்த கேலிச்சித்திரம் இடம் பெற்றது என்று ஹிந்தி திணிப்புக்கான ஆதரவும், ஹிந்தி திணிப்புக்கு எதிரான எதிர்ப்பை ஹிந்திக்கு எதிரான எதிர்ப்பாகவும் பதிவு செய்வதும் தொடர்கிறது. தியாகராயநகர் ஹிந்தி பிரச்சாரசபா விரும்பி ஹிந்தி பயிலும் நபர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறது ஆனால் ஹிந்தியை எதிர்த்து அரசியல் செய்த நபர்களின் பிள்ளைகள் அவர்களின் வாரிசுகள் ஹிந்தி பயில்வதுடன் ஹிந்தி கற்பிக்கும் பள்ளிகளையும் நடத்துவது தான் ஆச்சரியத்தின் உச்சநிலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்