புதுக்கோட்டை குடியரசு விழா கொண்டாட்டம் மரங்கள் வழங்கியது ஆட்சியருக்கு சிறப்பு
குடியரசு தின விழா நேற்று புதுக்கோட்டையில்  கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தேசியக் கொடியேற்றி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், காவல் துறையைச் சேர்ந்த 63 நபர்களுக்கு தமிழக முதலமைச்சர் பதக்கங்களையும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 162 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். மைதானத்தில் ஆனந்தராஜ் என்பவர் வடிவமைத்திருந்த ராணுவத் தளவாட மாதிரிகளையும் ஆட்சியர் பார்வையிட்டார். அதன்பின் மரம் அறக்கட்டளைகள் சார்பில்  மரக்கன்றுகளை அதன் நிறுவனத்தின் தலைவர் இராஜா அவர்களிடம் பெற்று வழங்கினார். கலை கலாச்சார நிகழ்வுகளைக் கண்டு மகிழ விழா இனிதாய் நிறைவு பெற்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்