புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரியவகை எறும்பினம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தமிழகம், கேரளாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரியவகை எறும்பினம்இந்தியாவில் புதிதாக இரண்டு அரியவகை எறும்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழகம், கேரளாவில் ‘ஊசரே’ (Ooceraea) என்ற புதிய எறும்பினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணர்வு கொம்பு பிரிதலில் இந்த எறும்புகள் பிற எறும்புகளிலிருந்து வேறுபடுகின்றன.

கேரளாவின் பெரியார் புலிகள் சரணாலயத்தில் கண்டறியப்பட்ட இந்த இன எறும்புக்கு ‘ஊசரே ஜோஷி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் ஜவஹர்லால் நேரு உயரிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் தலைசிறந்த உயிரியலாளரான பேராசிரியர் அமிதாப் ஜோஷியின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இரண்டு வகைகளில் 10 உணர்வு கொம்பு பிரிவுகள் கொண்ட அரிய வகை எறும்பினத்தை பாட்டியாலாவின் பஞ்சாபி பல்கலைகழக பேராசிரியர் திரு ஹிமேந்தர் பாரதி தலைமையிலான குழு கண்டுபிடித்தது. ஜூகீஸ் என்ற சஞ்சிகையில் இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பான கட்டுரை வெளியாகியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்