ஊராட்சி ஊழலைச் சுட்டிக்காட்டிய பத்து ரூபாய் இயக்க மாற்றுத்திரனாளி மீது தாக்குதல்

திருச்சிராப்பள்ளி மாவட்ட பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில நிர்வாகி மீது கொலை முயற்சியில் ஈடுபட்ட ஊராட்சிச் செயலாளர் கைது,ஊராட்சித் தலைவர் தலைமறைவு

உள்ளாட்சி ஊழல்களைத் தட்டிக்கேட்ட மாற்றுத்திறனாளியான ராமச்சந்திரன் என்பவர் மீது  தாக்குதல். தாத்தயங்கார்பேட்டை ஒன்றியம் சூரம்பட்டி ஊராட்சி மன்றம் மற்றும் அருகிலுள்ள ஊராட்சிகளில் போலிக் கணக்குகள், போலிக் கழிவறை போன்ற  ஊழல்கள் செய்ததை சுட்டிக்காட்டிய  மாற்றுத்திறனாளி  ராமச்சந்திரன் மீது ஏற்கனவே மூன்று முறை  தாக்குதல்நடத்தியுள்ளதாகவும். கழிவறை ஊழல் தொடர்பாக மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் (தணிக்கை)  சூரம்பட்டி கிராமத்திற்கு நேரடி விசாரணைக்கு வரவிருந்த நிலையில் நேற்றிரவு  ராமச்சந்திரன் மீது தாக்குதல் நடந்துள்ளதாகவும்,ஆயுதங்களால் தாக்கியதில் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவால் திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அபாய கட்டத்தைத் தாண்டியள்ளார். இந்நிலையில்  சூரம்பட்டி ஊராட்சித் தலைவர் கோடி சூரம்பட்டி ஊராட்சி செயலாளர் கண்ணன் சேருகுடி ஊராட்சித் பெண்  தலைவரின் மகன் அசோக் குமார், மதிவாணன் ஆகியோர் தூண்டுதலில்  இத் தாக்குதல் நடந்ததாக புகார் மீது காவல் துறை  சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்துள்ளார்கள் தலைமறைவானவர்களை  கைது செய்ய காவல்துறை   நடவடிக்கை எடுக்க வேண்டுமென 

பத்துரூபாய் இயக்கத்தின்

தமிழக ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் கார்த்திகேயன் கேட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்