அதிமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை கேட்கும் இரண்டு தொகுதிகள்.

அதிமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை கேட்கும் இரண்டு தொகுதிகள்.

திருவாடாணை சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறிய தகவலில்  "சின்னம்மா இன்னைக்கு நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். இந்நிலையில், நானும் மற்றவர்களை போல கீழ்த்தனமான அரசியல் செய்ய விரும்பவில்லை.கூவத்தூர் ரிசார்ட்டில் நானும்தான் இருந்தேன் என்று உலகத்துக்கே தெரியும். ஒருவருக்கு உடம்பு சரியில்லாமல் சிகிச்சை பெற்று வரும்போது, அவரை குறித்து தவறான அரசியல் செய்யாமல், மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். அத்துடன், அதிமுக கூட்டணியில் தனக்கு இரண்டு சீட் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட  முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காங்கயத்தில் நடந்தது. இதில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனரும், எம்எல்ஏவுமான கருணாஸ் கலந்து கொண்ட

பின் செய்தியாளர்களிடம் பேசியபோது தான்  "மூத்த குடியான தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட முக்குலத்தோருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறோம்.. தேர்தல் நெருங்க இருக்கின்ற சூழ்நிலையில் அதிமுக எங்களைப் போன்ற சிறிய அமைப்புகள் கட்சிகளை அழைத்து தொகுதி பங்கீடு நடத்தும்.

சென்ற முறை ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற எங்களுக்கு தற்போது இரண்டு  சட்டமன்றத் தொகுதிகள் வேண்டும் என்று கேட்போம். முக்குலத்தோர் புலிப்படை கட்சி எந்த அமைப்பிற்கும் ஜாதிக்கும் எதிரானவர்கள் கிடையாது. அவரவர் ஜாதிக்கான உரிமையை கேட்பதும் அதனை மாநில அரசு வழங்குவதும் வரவேற்கத்தக்கது. வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கினால், முக்குலத்தோரின் 50 ஆண்டு கால கோரிக்கையான மதுரை ஏர்போர்ட்டிற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவால்தான் முதலமைச்சர் பதவிக்கு வந்தேன் என்று எடப்பாடி பழனிச்சாமி  சொல்கிறார்.. கூவத்தூர் ரிசார்ட்டில் நானும் இருந்தேன் என்று உலகத்துக்கே தெரியும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் 27 வருஷமாக ஒரு நிழல் போல இருந்தவர் சின்னம்மா புரட்சி தலைவி அம்மாவின் நிழலாக செயல்பட்டு வந்தவர் சின்னம்மா அதிமுக சசிகலா அவர்களின்  கட்சி. ஜெயலலிதா மறைந்த பிறகு அனைத்து நிர்வாகிகளும் சேர்ந்துதான் சசிகலாவுக்கு பொதுச்செயலாளர் பொறுப்புத் தந்தனர்.

அதற்கு பிறகு ஏற்பட்ட உள்கட்சி பூசல் காரணமாக திடீர் முடிவுகள் எடுக்கப்பட்டன... அதிமுகவில் தோழமை கட்சியாகத்தான் முக்குலத்தோர் புலிப்படை உள்ளது. நிச்சயமாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம். எங்களது கட்சி தனிச் சின்னம் பெரும் அங்கீகாரம் தற்போது இல்லை. அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இரண்டு  சீட் தான் கேட்கிறோம்.. ஏன்னா, என்னோட மட்டுமே அது போயிடக்கூடாது.எனக்குப் பிறகு, என்னை சார்ந்தவர்களும் இந்த அரசியலுக்குள் வரணும். சமுதாய ரீதியில் ஒரு பாதுகாப்பு அரண் தேவை என்பதால்தான் இரண்டு சீட் கேட்கிறேன்." என்றார். கூவத்தூரில் நானும் தான் இருந்தேன்.. 2 தானே கேட்கிறேன்..!

 "சின்னமா இன்னைக்கு நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார்.. இந்நிலையில், நானும் மற்றவர்களை போல கீழ்த்தனமான அரசியல் செய்ய விரும்பவில்லை.. கூவத்தூர் ரிசார்ட்டில் நானும்தான் இருந்தேன் என்று உலகத்துக்கே தெரியும்... ஒருவருக்கு உடம்பு சரியில்லாமல் சிகிச்சை பெற்று வரும்போது, அவரை குறித்து தவறான அரசியல் செய்யாமல், மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும்" என்று கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன்

பாமகவுக்கு இடஒதுக்கீடு தந்தால், தங்கள் கட்சிக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறார், மேலும், வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கினால், மதுரை ஏர்போர்ட்டிற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதால், இடஒதுக்கீடு கோரிக்கை வைக்கும் பல கட்சிகளுக்கும் பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. இதனால், பாமகவுக்கு எந்த காலத்திலும் உள்ஒதுக்கீடு என்ற விஷயத்தை செயல்படுத்த முடியாது என்றே தெரியவருகிறது.அதனால் நானும் மற்றவர்களை போல கீழ்த்தனமான அரசியல் செய்ய விரும்பவில்லை... உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், யாருமே அவரை குறித்து தவறான அரசியல் செய்யாமல், மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும். மறைந்த புரட்சி தலைவி அம்மாவின் நிழலாக செயல்பட்டு வந்த சின்னமா என அழுத்தமாக தனது கருத்தை பதிவு செய்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்