சென்னை விமான நிலையத்தில் 1.01 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 1.01 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் 1.01 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.48.9 லட்சம்.

துபாயில் இருந்து ‘பிளை துபாய்’ விமானம் மூலம் சென்னை வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்ற பயணியிடம், சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது,

2 தங்க பசை பொட்டலங்களை அவர் தனது உடலில் மறைத்து வைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றிலிருந்து 416 தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.19.9 லட்சம்.

மற்றொரு சம்பவத்தில் இண்டிகோ விமானம் ஒன்றில், சீட்டுக்கு  அடியில் 600 கிராம் எடையில் 6 தங்க துண்டுகள்  மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.29 லட்சம்.

மொத்தம் 1.01 கிலோ எடையில், ரூ.48.9 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்