தமிழகத்தில் தற்போது 1,376 முத்திரைத்தாள் விற்பனையாளர்களை நியமிக்கும் பணி துவக்கம்.

 தமிழகத்தில் தற்போது 1,376 முத்திரைத்தாள் விற்பனையாளர்களை நியமிக்கும் பணி துவக்கம். 


பத்திரப் பதிவு உள்ளிட்ட பதிவுகள்  செய்ய, தமிழகத்தில்  575 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவண எழுத்தர்கள், மற்றும்  முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் உள்ளனர்.பல ஆண்டுகளாக, புதிய ஆவண எழுத்தர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்களின் உரிமம் வழங்கும் பணிகள் முடங்கியுள்ளன. பத்திரப்பதிவுக்கு வரும், மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அளவுக்கு, இவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக, பதிவுத்துறைத் தலைவர் பி.சங்கர் பிறப்பித்துள்ள உத்தரவில் பதிவுத்துறையில் காலியாக உள்ள, 1,376 முத்திரைத்தாள் விற்பனையாளர் காலி இடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப்படுவதாகவும் நெறிமுறைப்படி உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, காலியிடங்களை நிரப்ப, மாவட்டப் பதிவாளர்கள் நடவடிக்கைகள் எடுக்கலாம்.

முத்திரைச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, கல்வித்தகுதி, முன் அனுபவம், உரிமம் கோரும் பகுதியில் வசித்தல், உடல் தகுதி, செல்வ நிலை அடிப்படையில் விண்ணப்பங்கள் பெறுவது தொடர்பாக, முறையாக அறிவிக்கை வெளியிடப்படுவதன் அடிப்படையில் விண்ணப்பம் வழங்கி, நேர்முகத் தேர்வு நடத்த, உரிய அறிவுறுத்தல்கள், மாவட்ட பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் படி நியமனம் நடக்க உள்ளது அது ஊழலின்றி உரிய தகுதியின் அடிப்படையில் நடக்கவேண்டும் என்பதே அனைவரும் கோருவதாகும் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்