14 ஆம் தேதி தமிழகத்திற்கு வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத் திட்டம்

பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி தமிழகத்திற்கு வரும் பாரதப் பிரதமர் நரேந்திர  மோடியின் பயணத் திட்டம்குறித்த விபரம். பிரதமர்  கடந்த மாதம் 31 ஆம் தேதி  தகவல்கள் வெளியானபடி அண்மையில் டெல்லிக்குச் சென்ற தமிழகத்தின்  முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருப்பது. மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களைத் துவக்கி வைக்க இருக்கும்  தகவலும் வெளியாகியிருந்தது. பிப்ரவரி          14 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டமான, விம்கோ நகர் - வண்ணாரப் பேட்டை மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். அதேபோல காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

இது தவிர மேலும் பல்வேறு திட்டங்களையும் பிரமதர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

அரசு நிகழ்ச்சிகளுக்காக தமிழகம் வந்தாலும் பிரச்சாரப் பொதுக் கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்பார் எனத் தெரிகிறது  அதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜக செய்து வருகிறது. பிப்ரவரி.14 ஆம் தேதி காலை 7.50 க்கு புறப்பட்டு 10.35 க்கு சென்னை வரும் பிரதமர், மூன்று மணி நேரம் மட்டுமே சென்னையில் இருப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்