சமையல் எரிவாயு விலை உயர்கிறது பிப் 17 ல் எரிவாயு திட்டம் அடிக்கல் நாட்டும் பிரதமர்



சமையல் ஏரிவாயு உருளையின் (14.2 கிலோ) விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது புதிய விலை நாளை முதல் அமலுக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, தலைநகர் டெல்லியில் ஒரு சமையல் எரிவாயு உருளையின் விலை 769 ரூபாயாக உயரும் எனவும் அது சென்னையில் ஒரு உருளையின் விலை 785 ரூபாயாக உயரும்.ஜூலை மாதம் முதல் ஒரு சமையல் எரிவாயு உருளையின் விலை 594 ரூபாயாக இருந்தது. பின்னர் 2020 ஆம் ஆண்டு  டிசம்பர் முதல்  தேதியன்று உருளையின்  விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. பின் அதே டிசம்பர் 16 ஆம் தேதி மீண்டும் உருளையின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது.

ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக  உயர்ந்து கொண்டே இருக்கும்  நிலையில், தற்போது சமையல் எரிவாயு உருளையின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது இதனால்  மக்கள் கடும் துன்பத்தை அனுபவிக்க அடிப்படைக் காரணம் பெட்ரோல்,டீசல் விலை அடிக்கடி உயர்வதேயாகும்.இந்த நிலையில் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் 

பிப்ரவரி 17 ஆம் தேதி தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, முக்கியத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்

பிரதமர்  நரேந்திர மோடி பிப்ரவரி 17 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, முக்கியமான சில திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சி காணொலி மூலமாக நடைபெறும். ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு, சென்னை மணலியில் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்  கேசோலின் சல்பர் நீக்கப் பிரிவு (பெட்ரோலிய எரிபொருளில் கந்தகத்தை நீக்குதல்) ஆகியவற்றை பிரதமர்  நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். 

நாகப்பட்டினத்தில் அமையவுள்ள காவிரிப் படுகை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டங்கள் மூலம் சமூகப் பொருளாதார பயன்கள் அதிகரித்து, உர்ஜா தற்சார்பு நிலையை நோக்கி நாடு நடைபோட உதவி செய்யும். தமிழக ஆளுநர், முதல்வர், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

திட்டங்களின் விவரம்

எண்ணூர் - திருவள்ளூர் - பெங்களூரு - புதுச்சேரி - நாகப்பட்டினம் - மதுரை - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தில் ராமநாதபுரம் - தூத்துக்குடி பகுதி (143 கிலோ மீட்டர்) ரூ.700 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி. இயற்கை எரிவாயு உற்பத்தி வளாகங்களில் இருந்து தொழிற்சாலைகள் மற்றும் வணிக பயன்பாட்டு நுகர்வோருக்கு கச்சா பொருளாக குழாய் மூலம் அளிக்க இது உதவும்.

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், மணலி வளாகத்தில் கேசோலின் சல்பர் நீக்க வளாகம் ரூ.500 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலுக்கு உகந்த சல்பர் அளவு குறைவான கேசோலின்  உற்பத்திசெய்வதன் மூலம், கழிவு வாயு வெளியாக்கம் குறைக்கப்பட்டு, சுத்தமான சுற்றுப்புறத்தை உருவாக்க உதவியாக இருக்கும்.

நாகப்பட்டினத்தில் அமையவுள்ள காவிரிப் படுகை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, ஆண்டுக்கு 9 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும்.

ஐ.ஓ.சி.எல். மற்றும் சி.பி.சி.எல். நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக சுமார் ரூ.31,500 கோடி செலவில் இத் திட்டம் செயல்படுத்தப்படும். பி.எஸ்.-6 வரையறைகளுக்கு உட்பட்டு மோட்டார் ஸ்பிரிட் மற்றும் டீசல் உற்பத்தி செய்வதுடன், மதிப்புகூட்டு பொருளாக பாலிபுரப்பலீன் உற்பத்தியும் செய்யப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்