2021 ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஜிட்டல் முறையில் இன்று தாக்கல் செய்தார2021 ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஜிட்டல் முறையில் இன்று தாக்கல் செய்தார


.மூலதன செலவுக்கு ரூ.5.54 லட்சம் கோடி: 34.5 சதவீதம் அதிகம்

மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மூலதன செலவுக்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ.5.54 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என அறிவித்தார். இது கடந்த நிதியாண்டு பட்ஜெட் மதிப்பீட்டை விட 34.5 சதவீதம் அதிகம். கடந்த நிதியாண்டில் மூலதன செலவு ரூ.4.12 லட்சம் கோடியாக இருந்தது.

நிதி நெருக்கடி நிலையிலும், மூலதன செலவுக்கு அதிகம் செலவு செய்ய மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். 2020-21ம் நிதியாண்டில் மூலதன செலவு ரூ.4.39 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார விவாகரத்துறையின் மூலதன பட்ஜெட்டில் ரூ.44 ஆயிரம் கோடி உள்ளது எனவும், அவை நல்ல முன்னேற்றம் உள்ள மூலதன செலவு திட்டங்களுக்கு வழங்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார். 

மூலதன செலவுகளுக்காக, மாநிலங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளுக்கு ரூ.2 லட்சம் கோடி வழங்கப்படும்காப்பீட்டுத்துறையில் எஃப் டிஐ வரம்பு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது பாதுகாப்புடன் கூடிய வெளிநாட்டினர் உரிமை மற்றும் கட்டுப்பாட்டுக்கு அனுமதி

நாடாளுமன்றத்தில்  2021-22ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், காப்பீட்டுத் துறையில், அந்நிய முதலீட்டு வரம்பை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக  அதிகரிக்கும் வகையில் காப்பீட்டுச் சட்டம் 1938-ல் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். புதிய உத்தேச வரையறையின்படி, நிறுவன வாரியத்தின் பெரும்பாலான இயக்குநர்கள் மற்றும் முக்கிய மேலாண்மை நிர்வாகிகள் இந்தியர்களாக இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட அளவிலான லாபம் பொது இருப்பாக வைக்கப்படும்.

          பொதுத்துறை வங்கிகளின் நிதித் திறனை ஒருங்கிணைக்கும் வகையில், 2021-22ஆம் நிதியாண்டில் ரூ.20,000 கோடி அளவுக்கு மறு முதலீடு செய்ய அரசு உத்தேசித்துள்ளது.

          சிறிய அளவில் கடன் பெறுவோரின் நலனைப் பாதுகாக்க கடன்  ஒழுங்குமுறை மேம்படுத்தப்படும்.  வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் குறைந்தபட்ச சொத்து மதிப்பு ரூ.100 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டின் சர்ஃபாசி சட்டத்தின் கீழ் கடன் மீட்பு அளவு ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக குறைக்கப்படுகிறது என அமைச்சர் தகவல்.ஒப்பந்த பூசல்களுக்கு தீர்வுகாண சமரச அமைப்பு உருவாக்கப்படும்

மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22-ஐ மக்களவையில் இன்று தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், நிதிநிலை அறிக்கையின் ஆறு தூண்களில் ஒன்றான சீர்திருத்தங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

 

இந்திய வரலாற்றில், அடுத்து வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புதான் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் முதல் கணக்கெடுப்பு என்றும், இதற்காக இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.3,768 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

அரசு, மத்திய பொதுத்துறை நிறுவனங்களுடன் தொழில் ரீதியான உறவுகளை கொண்டிருப்பவர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் உதவுவதற்காக சமரச அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும் என்று கூறிய திருமதி நிர்மலா சீதாராமன், ஒப்பந்தம் தொடர்பான பூசல்களுக்கு விரைவான தீர்வுகாண இது உதவும் என்றார்.  இது தனியார் முதலீட்டாளர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் நம்பிக்கையை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

சுகாதாரத் துறை சார்ந்த வல்லுநர்கள் பாதுகாப்புக்கான தேசிய ஆணைய மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  சுகாதாரம் சார்ந்த 56 துறைகளை ஒழுங்குபடுத்துவதும், வெளிப்படைத்தன்மையுடன் இயங்க செய்வதும்தான் இதன் நோக்கமாகும்.  மேலும், செவிலியர் பணித்துறையில் வெளிப்படைத்தன்மையையும், திறன் மேம்பாட்டையும், சீர்திருத்தங்களையும் மேற்கொள்வதற்காக தேசிய செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் பாதுகாப்பு ஆணைய மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.பொதுத்துறை நிறுவனங்களில் தனியார்மய கொள்கை அறிவிப்பு

சமூக மற்றும் வளர்ச்சி திட்டங்கள் பலவற்றுக்காக, அரசு பொதுத்துறை நிறுவனங்களில், தனியார்மய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தனியார் முதலீட்டை கொண்டுவரவும்  மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், அரசு பொதுத் துறை நிறுவனங்களில் உத்தியுடன் கூடிய தனியார்மய கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். இது முக்கியம் மற்றும் முக்கியமற்ற துறைகளில் தனியார்மயத்துக்கான தெளிவான திட்டத்தை வழங்கும்.

தற்சார்பு இந்தியா தொகுப்பின் கீழ், அரசின் உறுதியை நிறைவேற்ற, பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் மய கொள்கை கொண்டு வரப்படுவதாகவும், அதன் முக்கிய  அம்சங்களையும், அமைச்சர் சுட்டிக்காட்டினார்:


இத்திட்டத்தின் கீழ் தற்போதுள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை காப்பீடு நிறுவனங்கள் வரவுள்ளன.


2 வகை துறைகள் தனியார்மயமாக்கப்படவுள்ளன:


அ. முக்கிய துறை: குறைந்த அளவிலான பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் இருக்கும் மற்றவை தனியார் மயமாக்கப்படும் அல்லது மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் இணைக்கப்படும் அல்லது மூடப்படும்.

முக்கிய பிரிவுகளின் கீழ் வரும் துறைகள் :


அணுசக்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை


போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு


மின்சாரம், பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் இதர கனிமவளங்கள் துறை


வங்கித்துறை, காப்பீடு மறறும் நிதி சேவைகள் துறை


முக்கியமற்ற பிரிவு: இந்தப் பிரிவில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும், அல்லது மூடப்படும்.

 மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22: சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு ரூ.‌1,18,101 கோடி ஒதுக்கீடு

இதுவரை இல்லாத வகையில் ரூ. 1,08,230 கோடி, மூலதனமாக அறிவிப்பு

பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் 8500 கிலோமீட்டருக்கு அனுமதி வழங்க இலக்கு

2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 11,000 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைத் தடம் நிறைவடையும்.

பல்வேறு பொருளாதார வழித்தடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன சாலைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஏராளமான அறிவிப்புகளை மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு ரூ. 1,18,101 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் அதிகளவில் ரூ. 1,08,230 கோடி, மூலதனமாக வழங்கப்பட்டுள்ளது.

ரூ. 5.35 லட்சம் கோடி மதிப்பிலான பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 3.3 லட்சம் கோடி மதிப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ள 13000 கிலோ மீட்டருக்கும் அதிகமான சாலைகளில் 3800 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மக்களவையில் அறிவித்தார். வரும் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் 8500 கிலோ மீட்டருக்கு அனுமதி வழங்கப்படுவதுடன், கூடுதலாக 11000 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைத் தடமும் நிறைவடையும்.

சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பல்வேறு பொருளாதார வழித்தடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்: 

1.      தமிழகத்தில் 3,500 கிலோமீட்டர் தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி ரூ.1.03 லட்சம் கோடி  செலவில் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. மதுரை-கொல்லம், சித்தூர்-தச்சூர் வழித்தடங்களில் இந்த தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.

2.      கேரளாவில் 1,100 கிலோமீட்டர் தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் ரூ.65,000  கோடி  செலவில் அமைக்கப்படும்.  கேரளாவில் 600 கிலோமீட்டர் தொலைவிலான மும்பை- கன்னியாகுமரி  வழித்தடமும் இதில் அடங்கும்.

3.      கொல்கத்தா- சிலிகுரி  சாலை மேம்பாட்டுப் பணிகள் உட்பட மேற்கு வங்காளத்தில் 675 கிலோமீட்டர் தொலைவிலான நெடுஞ்சாலைப் பணிகள் ரூ. 25,000 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

4.      அசாமில் ரூபாய் 19 ஆயிரம் கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்த மூன்று ஆண்டுகளில் 1300 கிலோமீட்டருக்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் ரூ. 34,000 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

முன்னோடி திட்டங்கள்: சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள்:

தமிழ்நாட்டில் 2021-22 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ள முன்னோடி திட்டங்கள் பின்வருமாறு:

•        பெங்களூரு- சென்னை எக்ஸ்பிரஸ் வழித்தடம்: நடப்பு நிதியாண்டில் 278 கிலோமீட்டர் தொலைவிலான பணிகள் தொடங்கும். 2021-22ஆம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் துவங்கும்

•        சென்னை- சேலம் வழித்தடம்: 277 கிலோமீட்டர் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் அனுமதி வழங்கப்பட்டு 2021- 22ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் துவங்கும்.நிதி அமைச்சகம்

வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு 9 வகையான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர்

முன்னுதாரண இந்தியாவுக்கான உள்ளடக்கிய வளர்ச்சியை அடையும் நோக்கில் வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் 9 வகையான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.


நடப்பு நிதியாண்டில் வேளாண் துறைக்கு அளிக்கப்படும் கடனின் அளவு ரூ.16.5 லட்சம் கோடிக்கு அதிகரிக்கப்பு:


விவசாயிகளுக்கு போதிய அளவு வேளாண் கடன் வழங்கும் வகையில், நடப்பு நிதியாண்டில் ரூ.16.5 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்கும் அளவு அதிகரிக்கப்படுகிறது. மேலும் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்பு போன்ற வேளாண் சார்ந்த துறைகளுக்கும் இத்தகைய கடனை வழங்க அரசு கவனம் செலுத்தி வருகிறது.


ஊரக கட்டமைப்பு வளர்ச்சிக்கான நிதி 33% அதிகரிப்பு:


ஊரக வளர்ச்சி மேம்பாட்டு நிதி ரூ.30,000 கோடியிலிருந்து ரூ.40,000 கோடியாக அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


நுண்பாசனத் திட்ட நிதி இரு மடங்காக அதிகரிப்பு:


வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் (நபார்டு) கீழ் செயல்படுத்தப்படும் நுண்பாசனத் திட்டத்திற்கான நிதி தற்போது ரூ.5,000 கோடி அளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக ரூ.5,000 கோடி ஒதுக்கப்படுவதாக அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.


இ-நாம் திட்டத்தின் கீழ் 1000 மண்டிகள் இணைக்கப்படும்:


இ-நாம் திட்டத்தின் கீழ் 1.68 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர் என்றும், ரூ.1.14 லட்சம் கோடி அளவுக்கு இந்த இ-நாம் மூலம் வணிகம் நடைபெறுவதாகவும் அமைச்சர் கூறினார். மேலும் இந்தத் திட்டம் வெளிப்படையாகவும், போட்டித்தன்மையுடனும் இருக்க 1000 மண்டிகள் இ-நாம்-வுடன் இணைக்கப்படுவதாக  அவர் தெரிவித்தார்.


5 முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்:


மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மையங்களை நவீன அளவில் மேம்படுத்த போதிய முதலீடுகள் செய்யப்படும் என்று கூறிய அமைச்சர், 5 பெரிய மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும் என்றார். குறிப்பாக சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம், பாரதீப் மற்றும் பெட்டாகட் ஆகிய துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையங்களாக உருமாற்றப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் மூலம் உள்நாட்டு மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மையங்கள் மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.


தமிழகத்தில் பல்வகை பயன்பாட்டுக்கான கடற்பாசி பூங்கா அமைக்கப்படும்:


கடற்பாசியின் மதிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், கடலோரவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், வளர்ந்து வரும் துறையாக கடற்பாசி வளர்ப்பு திகழ்கிறது. அந்த வகையில், கடற்பாசி வளர்ப்பை மேம்படுத்தும் வகையில் தமிழகத்தில் பல்வகை பயன்பாட்டுக்கான கடற்பாசி பூங்கா அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் பெரிய அளவில் வேலைவாய்ப்பு உருவாகுவதோடு கூடுதல் வருவாயை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டுகளில், விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதே இந்த அரசின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது எனவும், இந்த நோக்கம் தொடரும் என்றும் அவர் கூறினார். மேலும் அரிசி, கோதுமை, பயிர் வகைகள் போன்றவற்றின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் இதன் காரணமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலை உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர்  குறிப்பிட்டார்.ஓய்வூதியம் மற்றும் வட்டி வருமானம் மட்டும் உள்ள 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமானவரி தாக்கலில் இருந்து விலக்கு


மத்திய நிதி நிலை அறிக்கை 2021-22-ஐ, மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், கொரோனா பெருந்தொற்றுக்குப்பின், அமையும் புதிய உலக அரங்கில் இந்தியா முன்னிலை வகித்து முக்கிய பங்காற்றும். இந்த சூழலில், நமது வரி முறைகள், வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும், முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும் என அவர் கூறினார். அதே நேரத்தில், வரி முறைகள், வரி செலுத்துவோருக்கு குறைந்த சுமையாகவும் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். வரி செலுத்துவோர் மற்றும் பொருளாதார நலனுக்காக, பெரு நிறுவனங்களின் வரி குறைப்பு உட்பட மத்திய அரசு பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த 2020ம் ஆண்டில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்ந்தது. இது கடந்த 2014ம் ஆண்டில் 3.31 கோடியாக இருந்தது.

மூத்த குடிமக்களுக்கான சலுகை

இந்த மத்திய நிதி நிலை அறிக்கையில், மூத்த குடிமக்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

75வது சுதந்திர ஆண்டில், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வரித்தாக்கல் சுமையை குறைக்க, இந்த நிதிநிலை அறிக்கையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஓய்வூதியம் மற்றும் வட்டி வருமானம் மட்டும் உள்ள, 75 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வருமானத்தில் தேவையான வரியை, ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளே பிடித்தம் செய்து கொள்ளலாம்.

மலிவு விலை வீடுகள்/வாடகை வீடுகளுக்கான சலுகைகள்:

வருமானவரி கணக்கு தாக்கலின் போது, மலிவு விலை வீடுகளுக்கான கடனில் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை  வட்டிக்கு வருமானத்தில் இருந்து விலக்கு அளிக்கும் சலுகை 2022, மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மலிவு விலை வீடுகள் கட்டுவதை ஊக்குவிப்பதற்காக, இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், புலம் பெயர் தொழிலாளர்களுக்கான மலிவு விலை வாடகை வீடுகள் கட்டப்படுவதை ஊக்குவிக்க, மலிவு விலை வாடகை வீடு திட்டங்களுக்கு புதிய வரி விலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க நிறுவனங்களுக்கு வரி சலுகைகள்:

நாட்டில் தொடக்க நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக, தொடக்க நிறுவனங்களுக்கு 2022 மார்ச் 31ம் தேதி வரை, விற்பனை வரி குறைப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க நிறுவனங்களின் முதலீட்டை ஊக்குவிக்க, தொடக்க நிறுவனங்களுக்கான முதலீட்டுக்கு, மூலதன ஆதாய விலக்கு 2022 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

தொழிலாளர் நல நதிக்கான பங்களிப்பு குறித்த நேரத்தில் செலுத்த வேண்டும்

பல்வேறு நல திட்டங்களில் தொழிலாளர்களின் பங்களிப்பை, வேலை அளிக்கும் நிறுவனங்கள் தாமதமாக செலுத்துவதால், தொழிலாளர்களுக்கு நிரந்தர வட்டி/ வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால், தொழிலாளர்களின் பங்களிப்பை, வேலை அளிக்கும் நிறுவனங்கள் தாமதமாக செலுத்த அனுமதிக்கப்படாது. 

வருமான வரி கணக்கை மீண்டும் சரிபார்ப்பதற்கான கால வரம்பு குறைப்பு:

வருமான வரி கணக்கு தாக்கலை மீண்டும் சரிபார்ப்பதற்கான காலம் தற்போது 6 ஆண்டுகளாக உள்ளது. இது இந்த நிதிநிலை அறிக்கையில் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு வழக்குகளில் ஓராண்டில், ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேல் வருவாய் ஆதாரங்கள் மறைக்கப்பட்டிருந்தால், 10 ஆண்டுகள் வரை அந்த வருமானவரி கணக்கை மறு ஆய்வு செய்ய முடியும். ஆனால் இதற்கு முதன்மை தலைமை ஆணையரின் ஒப்புதல் பெற வேண்டும்.பிரதமர் வெளியிட்ட அறிக்கை

நமஸ்காரம்!

2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அசாதாரணமான சூழ்நிலையில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. யதார்த்த உணர்வை வெளிப்படுத்துவதாகவும், நம்பிக்கை தருவதாகவும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு, ஒட்டுமொத்த மனித குலத்தையே அசைத்துப் பார்த்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில், இந்தியாவின் தன்னம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இன்றைய பட்ஜெட் இருக்கப் போகிறது. அதே சமயத்தில், உலக நாடுகளுக்கு புதிய நம்பிக்கையை அளிப்பதாகவும் இது இருக்கும்.

இன்றைய பட்ஜெட் தற்சார்புக்கான லட்சிய நோக்கு கொண்டதாகவும், அனைத்து தரப்பினரின் ஈடுபாட்டுடன் கூடிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டதாகவும் உள்ளது. வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள், புதிய வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குதல், மனிதவளங்களில் புதிய பரிமாணம், கட்டமைப்பு வசதியில் புதிய துறைகள், நவீனத்துவத்தை நோக்கி முன்னேறுதல், புதிய சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தல் என்ற கோட்பாடுகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

நண்பர்களே,

விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவதன் மூலம் சாமானிய மக்களின் `வாழும் தன்மையை எளிதாக்கும்' நிலையை மேம்படுத்த இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள், முதலீட்டாளர்கள், தொழில் துறையினர் மற்றும் கட்டமைப்புத் துறைகளில் ஏராளமான ஆக்கபூர்வ மாற்றங்களை இந்த பட்ஜெட் உருவாக்கும். இந்த அரும்பணிக்காக நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா அவர்கள், அவருடைய சக அமைச்சர் அனுராக் அவர்கள் மற்றும் அவர்களின் அணியினருக்கு நான் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

சமர்ப்பித்த ஒன்றிரண்டு மணி நேரத்திற்குள் நிபுணர்களிடம் இருந்து பல நேர்மறை கருத்துகளைப் பெற்ற அபூர்வமான பட்ஜெட் உரைகளில் ஒன்றாகவும் இது அமைந்துள்ளது. கொரோனா சூழ்நிலையில் சாமானிய குடிமக்கள் மீது அரசு சுமையை ஏற்றிவிடும் என்று பல நிபுணர்களும் ஊகித்திருந்தனர். ஆனால், நிதி ஸ்திரத்தன்மையை மனதில் கொண்டு, பட்ஜெட் அளவை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருந்தது. பட்ஜெட் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதற்காக நமது அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த பட்ஜெட்டின் வெளிப்படைத்தன்மை குறித்து பல நிபுணர்கள் பாராட்டு தெரிவித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.

நண்பர்களே,

கொரோனா நோய் பரவலைப் பொருத்த வரை, பாதிப்புக்குப் பிந்தைய எதிர்வினை செயல்களில் ஈடுபடுவது என்பதைக் காட்டிலும், முன்கூட்டியே ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது என்ற அணுகுமுறையை இந்தியா எப்போதும் கடைபிடித்து வருகிறது. கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களாக இருந்தாலும், தற்சார்பு இந்தியா திட்டத்தில் எடுத்துக் கொண்ட உறுதியாக இருந்தாலும் இந்தியா நேர்மறையுடன் செயல்பட்டது. இதை மேலும் முன்னெடுத்துச் செல்ல, நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆக்கபூர்வமான பட்ஜெட் அளித்திருப்பதன் மூலம், நாட்டிற்கு நேர்மறை செயல்பாட்டின் உறுதியைத் தெரிவித்திருக்கிறோம். சொத்து உருவாக்கல் மற்றும் ஆரோக்கிய நிலையை மேம்படுத்தும் துறைகளில் இந்த பட்ஜெட் கவனம் செலுத்தியுள்ளது. வாழ்க்கை இருந்தால் தான் உலகம் இருக்கும். குறிப்பாக எம்.எஸ்.எம்.இ.கள் மற்றும் கட்டமைப்பு துறைகளில் இந்த பட்ஜெட் கவனம் செலுத்தியுள்ளது. சுகாதாரத் துறையில் இந்த பட்ஜெட் செலுத்தியுள்ள கவனம், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அமைந்துள்ளது. நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சி காண்பது பற்றி இந்த பட்ஜெட் பேசுகிறது. அதாவது, ஒட்டுமொத்த வளர்ச்சி பற்றிப் பேசுகிறது. குறிப்பாக, தெற்கு, வட-கிழக்கு மாநிலங்கள் மற்றும் வடக்கில் லே-லடாக் பிராந்தியங்களின் வளர்ச்சியில் இந்த பட்ஜெட் சிறப்பு கவனம் செலுத்தி இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். தமிழ்நாடு, கேரளா, வணிக அதிகார மையமான மேற்குவங்கம் போன்ற இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் பெரிய திட்டங்களுக்கு பட்ஜெட் வகை செய்கிறது. அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில், பயன்படுத்தப்படாத வளங்களை அடையாளம் காண இந்த பட்ஜெட் உதவியாக இருக்கும். ஆராய்ச்சி மற்றும் புதுமை சிந்தனை சூழலுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதால், நம் இளைஞர்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும், பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க இந்தியா மிக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க உதவியாக இருக்கும்.

நண்பர்களே,

சுகாதாரம், கழிவறை வசதி, சத்துணவு, சுத்தமான தண்ணீர், சாமானிய மக்களின் வாழ்வை எளிதாக்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றுக்கு சம அளவு முக்கியத்துவம் அளிக்க இந்த பட்ஜெட்டில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால அளவில் நிறைய சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது குறித்தும், கட்டமைப்பு உருவாக்குவதற்கு செலவிடுதல் குறித்தும் பட்ஜெட்டில் திட்டங்கள் உள்ளன. இதனால் வளர்ச்சி அதிகரிப்பதுடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும். வேளாண்மைத் துறையை பலப்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. அதற்காக பல ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. வேளாண்மைத் துறையில், விவசாயிகளுக்கு அதிக கடன் வசதி எளிதாகக் கிடைக்கும். வேளாண்மைக் கட்டமைப்பு நிதி மூலமாக நாட்டில் ஏ.பி.எம்.சி. மண்டிகளுக்கு உதவுதல் மற்றும் அதிகாரம் அளிக்க ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கிராமங்களும் நமது விவசாயிகளும் இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்கள் என்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன. எம்.எஸ்.எம்.இ. துறையை ஊக்குவித்து, வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் வகையில், முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு எம்.எஸ்.எம்.இ. துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு இரு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது.

நண்பர்களே,

தற்சார்பை நோக்கிய பாதையில் பட்ஜெட் அமைந்துள்ளது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்தையும் உள்ளடக்கியதாக இது திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தசாப்தத்தின் தொடக்கத்திற்கான அடித்தளத்தை உருவாக்குவதாக இந்த பட்ஜெட் உள்ளது. தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான, இந்த முக்கியமான பட்ஜெட் அமைந்திருப்பது குறித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிதியமைச்சருக்கும், அவரது குழுவினருக்கும் மீண்டும் ஒரு முறை நான் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இது ஒரு முற்போக்கான நிதிநிலை அறிக்கை என அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.   நாடாளுமன்றத்தில் 2021-22 மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், உலகம் முழுவதும் கொவிட்-19 தொற்று, பொருளாதாரத்தை மோசமாக பாதித்துள்ளது என்றார். ஆனால் இந்தியா கொவிட்-19  தொற்றுக்கு எதிராக வெற்றி பெற்றதுடன், வறுமைக்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுத்து முன்னேற்றத்தை நோக்கி நடை போட்டுள்ளது என்று அவர் கூறினார்.

மூலதனச் செலவில் பெரும் ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர்,  உள்கட்டமைப்பில் ஐந்து லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஒரு பெரும் முன்முயற்சி என்று கூறினார். இது வேலைவாய்ப்பில் பெரும் ஊக்குவிப்பாக அமையும் ஏன்றார்.மத்திய நிதிநிலை அறிக்கை 2021 விவசாயிகளின் நண்பன் மோடி     “ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் மோடி அரசு திட்டத்தின் கீழ் 2020 - 2021 ஆண்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ 75,000 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. சென்னை மெட்ரோ ரயில் பணிக்கு ரூ.63 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

வீடுகளுக்கு நேரடியாக கேஸ் விநியோகிக்கும் திட்டத்தில் கூடுதலாக 100 மாவட்டங்கள் சேர்க்கப்படும்.

வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள மேலும் ஒரு கோடி பெண்களுக்குஇலவச சமையல் ஏரிவாயு  இணைப்பு வழங்கப்படும்

இந்த வருஷ பட்ஜெட்ல மக்களுக்கு ஏதாவது சலுகை உண்டா 

பருத்திக்கான இறக்குமதி வரி 10 சதம் அதிகரிப்பு.

.

தங்கத்திற்கான இறக்குமதி வரி 10 சதம் குறைப்பு.

.

இவ்வளவு தான் 

.ஏற்கனவே ஒன்றிய அரசின் கஸ்டம்ஸ் வரிகள், சேவை கட்டணங்களில் பெட்ரோல் / டீசல் விலை தாறுமாறாக ஏறி இருக்கிறது. மாநிலங்களும் தங்கள் பங்கிற்கு கூடுதல் விற்பனை வரி போட்டு வருவாய் பார்க்கிறார்கள். இந்த சூழலில் பெட்ரோலின் மீது 2.5 சதம்  டீசலின் மீது 4 சதம் என புதியதாக “வேளாண் செஸ்” என்கிற ஒன்றினைச் சேர்த்திருக்கிறார்கள்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் குறைந்திருந்த போதும் அரசு பணம் பார்த்தது. இப்போது பேரலுக்கு $50+ எனும் போதும் பணம்  அதற்கு மேலும் கூடுதல் செஸ்ஸின் மூலம் பணம் ஈட்டப் பார்க்கிறது. வேளாண் கூடுதல் வரி என்கிற பெயரில் இது வசூலிக்கப்படும் போது, அதிகமாக பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். ட்ராக்டர்கள், டாடா ஏஸ், லாரிகள் என விளைபொருட்களை ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு போகும் வாகனங்களுக்கான டீசல் 4 சதம்  உயர்ந்தால், எல்லாமே உயரும். இதனால் விவசாயிகளுக்கு என்ன பயன் கிடைக்கும் ?

இது போல சேவை வரியோடு சேர்த்து வாங்கப்பட்ட கல்வி கூடுதல் வரியின் பயன்பாடு என்ன என்பதும். இப்போது இது. ஒன்றிய அரசு என்பது அட்டை மாதிரி. சாமான்யர்களின் ரத்தத்தினை எவ்வளவு உறிஞ்ச முடியுமோ அவ்வளவையும் உறிஞ்சும், ஆனால் வெளியே  தெரியாது. கடினமான சூழலில் மிகச்சிறப்பான பட்ஜெட்  ஏனப்  பிரதமர் மோடி பாராட்டினஸலும் 

இன்றைய பட்ஜெட் இந்தியாவின் நம்பிக்கையை காட்டுகிறதெனவும் 

நாட்டின் வளர்ச்சியை பட்ஜெட் உறுதிப்படுத்துகிறதெனவும் கூறிய நிலையில் 

இந்தியன் ஆயில் கார்ப ரேசன் நிறுவனத்தின்

தற்போதைய வருடத்தின் நிகர லாபம் ஏறக்குறைய ரூ4300கோடிகள். இது சென்ற வருட லாபத்தை விட ஏறக் குறைய ரூ2200 கோடி (52%) அதிகம். பெட்ரோல் டீசல் சமையல் வாயு சிலிண் டர் ஆகிய விலைகளை கடுமையாக உயர்த்தி ஏழை எளிய நடுத்தர மக்களைச் சுரண்டினால் லாபம் வரத் தான் செய்யும். இந்த எண்ணை வியாபாரம் செய்யும் ரிலையன்ஸ் அம்பானிக்கு நடப்பு வருட நிகர லாபம் ஏறக்குறைய 70 சதம்  இந்த மத்திய மாநில அரசுகளை மக்கள் நல அரசா வணிக அரசா என எதிர்கட்சிகள் பேசுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்  இது சரியா 63,000 கோடி செலவில் சென்னை மெட்ரோ இரண்டாம் அலகு திட்டம் செயல்படுத்தப்படும்


மின் விநியோகத்தில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும்


பொது போக்குவரத்து பேருந்து வசதிக்கு ரூ.18,000 கோடி ஒதுக்கீடு


2023ஆம் ஆண்டு டிசம்பருக்குள் அனைத்து ரயில் வழித்தடமும் மின் மயமாக்கப்படும் 


கப்பல்களை மறுசுழற்சி செய்யும் ஆலைகளுக்கு பிரத்தியேக தளங்கள் உருவாக்கப்படும் 


ஜம்மு - காஷ்மீருக்கு பிரத்தியேக எரிவாயு குழாய் தடம் அமைக்கப்படும் 


ரயில்வே துறை - ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கீடுபொதுத் துறை காப்பீட்டு நிறுவனம், வங்கி,  மின்சார பகிர்மான நிறுவனங்கள் இவற்றை எல்லாம் விற்பது போதாதென்று, இவற்றுடன் சேர்த்து "பொதுத் துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் மற்றும் அரசு நிலங்களை விற்பது"  என்கிற முடிவிற்கு இந்த அரசு  சென்றுள்ளது. 

அதானி, அம்பானி வகையறாக்களின் சூறையாடலுக்கு இந்திய வளங்களை தாரைவார்க்கும் வேலை முன்னிலும் வேகங்கொள்ளும் ஆண்டாக வரும் ஆண்டு இருக்கப்போகிறதென எதிர்கட்சிகள் விமர்சனம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்