பொதுத்தேர்தலில் ஆட்சி மலர ஜாதி அரசியல் கைகொடுக்குமா

பொதுத்தேர்தல்களில் சாதி பெரிய அளவில் எடுபடாது என்பதே பலரது 


கருத்து. தி.மு.க வேண்டாம், அ.தி.மு.க வேண்டாம் என மக்கள் முடிவெடுத்து அதற்கேற்பதான் வாக்களிப்பார்கள். சாதி, மதம் போன்ற விஷயங்கள் பின்னுக்குப் போய்விடும். உதாரணமாக, 1991 முதல் 1996 வரை ஜெ. ஜெயலலிதா முதல்வராக இருந்த  ஆட்சியின் மீது கடும் ஊழல் புகார்கள் அது மக்களிடம் மிகப்பெரிய அளவில் ஆட்சியின் மீதான அதிருப்தியை உண்டாக்கியதால் அதை மடை மாற்றி  ஒவ்வொரு சாதியினரையும் தனித்தனியாக மகிழ்விக்கும் வகையில் ஜெ. ஜெயலலிதா பல முன்னெடுப்புகளைச் செய்ததில் ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களின் பெயரில் மாவட்டம், போக்குரத்துக் கழகங்கள், அவர்களுக்குப் பொது இடங்களில் சிலைகள் என ஆனால், என்னவானது. தேர்தல் முடிவுகளில் அது  தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.           தி.மு.க வும் த.மா.கா உடன் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது போலவே, 2001 தேர்தலில், அ.தி.மு.க வும்  காங்கிரஸ், பா.ம.க.,  கம்யூனிஸ்ட்கள் என  வலிமையான கூட்டணி அமைந்து.திமுகவுக்கு வலிமையுள்ள கூட்டணி இல்லாமல்  ஏ.சி.சண்முகத்தின் முதலியார் நெசவாளர் ஜாதிகள் கொண்ட புதிய நீதிக்கட்சி, கண்ணப்பனின் யாதவர் ஜாதி கொண்ட மக்கள் தமிழ்த்தேசம், கு.ப.கிருஷ்ணனின் முத்தரையர் ஜாதி கொண்ட தமிழர் கட்சி  இணைத்துப் போட்டியிட்டு  முடிவுகள் அ.தி.மு.க-வுக்குச் சாதகமாகவே வந்தன. அதனால், இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் வேண்டுமானால் ஜாதியம் சார்ந்த முன்னெடுப்புகள் எடுபடும்  பொதுத்தேர்தல்களில், குறிப்பிட்ட தொகுதிப் பகுதிகளில் வேண்டுமானால் சேதம்  ஏற்படுத்தும் அதேபோல,தேர்தல் நெருக்கத்தில் ஏதாவது சென்சிட்டிவான சம்பவம் நடந்தால் பாதிப்பு ஏற்படுத்தும். மற்றபடி தாக்கம்  ஏற்படுத்தாது என்பதே கடந்தகால வரலாறு.மேலும் இதுவரை புதிய தமிழகம் கட்சியோ கிருஷ்ணசாமி தவிர வேறு அறிமுகம்  இல்லாத தனி நபர் அரசியல்  நிலை  அல்லது ஜான்பாண்டியன் போன்ற தனிநபர் அரசியல் நிலை   தான் அங்கு இரண்டாம் கட்டத் தலைவர்கள் இல்லாததால் அவர்கள் வாரிசுகள் மட்டுமே இருவரும் முன் நிறுத்தி வருவதை நாம் கவனிக்க வேண்டும்.மேலும் இருவரின் கட்சியும் பொதுத் தொகுதிக்கு வரப்போவதில்லை தனித்தொகுதியில் தானே போட்டி அதில் அவர்கள் சார்ந்த ஜாதியை தானே எந்தக்கட்சியும் எதிர்த்து  நிற்கவைக்கும்.இதில் பலன் உண்டா இல்லையா என்பது தேர்தல் முடிவில் தானே தெரியும்.தேவேந்திரகுல வேளாளர் திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள நிலையில்

இட ஒதுக்கீட்டால் தங்களுக்கு பெரியளவில் லாபம் இல்லை என்றும், அரசியல் அதிகாரத்தையும் பெற முடியவில்லை என்றும் புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கட்சி, தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு போன்ற பல்வேறு அமைப்புகள் கூறிவந்ததில் 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போது முதல்வராக இருந்த மு. கருணாநிதி அவர்கள்  கோரிக்கையை பரிசீலிக்க நீதிபதி ஜனார்த்தனன் குழுவை அமைத்த சில மாதங்களில் ஆட்சி முடிவுக்கு வந்ததால் அது சாத்தியமாகவில்லை.

2015ஆம் ஆண்டே இச்சமூகத்தைச் சேர்ந்த நூறு பேர் பிரதமரைச்  சந்தித்து  வலியுறுத்திய கோரிக்கைக்கு அப்போது  கொங்கு வேளாளக் கவுண்டர்கள், பாண்டிய வேளாளர்கள், சோழிய வேளாளர்கள், கார் காத்த வேளாளர்கள், தொண்டை மண்டல வேளாளர்கள், நெல்லை சைவ வேளாளர்களின் சமூகங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. வேளாளர் என்ற பெயரை தேவேந்திர குல வேளாளர்களுக்குத் தரக்கூடாதென எதிர்ப்புத்  தெரிவித்தனர். இந்த சமூகங்களின் எதிர்ப்பைப் பெற வேண்டுமே என இவ்வளவு காலம் இந்தக் கோரிக்கை செயல் வடிவம் பெறாமுடியாமல் இருந்தத நிலையில் தற்போது முத்தரையர் சமூகத்தின் பல தலைவர்களில் ஒருவரான பெரம்பலூர் கே.கே.செல்வக்குமார் வண்ணியர்களில் ஆன்மீக பணியில் அதிகமான வார வழிபாட்டு மன்றம் வைத்துள்ள  உள்ள பங்காரு அடிகளார்,ஜான் பாண்டியன் உள்ளிட்ட பலர் இப்போது பாஜாகவை வைத்து தங்களுடைய அரசியல் பலனை அடைந்து கொண்டதே மிச்சம் அவர்கள் வாக்கு வங்கியாக மாற வாய்ப்பு இல்லைஅரசாணைக்கு பிற சமூகத்திடமிருந்துதான் எதிர்ப்பு வருகிறது.

ஆனால் 

பட்டியல் வெளியேற்றத்திற்கு, அவர்கள் 

உள் சமூகத்திலேயே எதிர்ப்பு 

உதாரணமாக, கிறிஸ்துதாஸ் காந்தி  முருகவேல்  ராஜன், ஸ்ரீதர் 

ஜான் பாண்டியன், மதுரை தங்கராஜ் இக் கோரிக்கை தீவிரமாக முன்னெடுக்கவில்லை அம்

மக்கள் மத்தியில்

தேவேந்திரகுல வேளாளர் என்று சாதிச் சான்றிதழ் கொடுத்தால் அமைதியாக, ஏன் சந்தோசமாக வாங்கிக்கொள்வார்கள் 

ஆனால், எஸ்ஸி இல்லை என்று சொல்வது, மேடையில் சொல்வதைப்போல் அவர்கள் அவ்வளவு  எளிதான சலுகைகள் இழக்கத் தயாரில்லை என்ற நிலை பலருக்கு உண்டு காரணம் அரசியல் வாதியாக இருக்கும் இந்த நபர்கள் இலக்கு தனித்தொகுதி பொதுத்தொகுதி வேண்டும் என்பதல்ல அதுவும் அந்தத் தலைவர்களின் சுயநலம் அடங்கியதாகும்

ஒரு பெயர் மாற்றத்திற்கே, பல வருடம் பல கமிட்டிகள்(ஜனார்த்தனன் கமிட்டி, வர்மா கமிட்டி, பேராசிரியர் சுமதி கள ஆய்வுக்குழு) போட்டு இறுதியில்  நாடாளுமன்ற மசோதா தாக்கல் என்ற நிலைக்கு வருகிறது.

ஆனால்,

பட்டியல் வெளியேற்றத்தை அவ்வளவு எளிதாக அடைந்துவிட முடியாது

ஒட்டுமொத்த சமூகமும் ஒரு முகமாக எழுந்து நிற்க வேண்டும்.தமிழக முதல்வர் 

எடப்பாடி கே.பழனிச்சாமி  வேற லெவல் அரசியலில் இறங்கிட்டார். முக்குலத்தோர் சமுதாய மக்களை ஒதுக்கி,  சின்ன அரசியல் கட்சிகளை ராஜா செய்து ஒட்டு வாங்கப் ‌போகிறார்

பொல்லானுக்கும் இப்போது சிலை நாம் இருவரை கேள்விப்பட்டதில்லை இப்படி ஒருபெயர். நல்ல முயற்சி தான்.

இவ்வளவு நாளா எங்கே யிருந்தார் ஏந்த அரசியல் தலைவருக்கும் அகப்படாமல்  என்ற வினா பலருக்கு உண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்