உத்தராகண்ட் மக்களுடன் மத்திய அரசு துணை நிற்கும் மத்திய உள்துறை அமைச்சர்

உள்துறை அமைச்சகம் இயற்கை பேரிடர் தருணத்தில் உத்தராகண்ட் மாநில மக்களுடன் மத்திய அரசு துணை நிற்கிறது: மத்திய உள்துறை அமைச்சர்


உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் பகுதியில் இயற்கை பேரிடர் நிகழ்ந்துள்ள இந்த தருணத்தில் திரு. நரேந்திர மோடியின் அரசு, அம்மாநில மக்களுக்கு துணையாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய, மாநில அரசுகளின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதாகவும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் மூன்று குழுக்கள் சம்மந்தப்பட்ட இடத்தைச் சென்றடைந்திருப்பதாகவும், இதர குழுக்களும் உத்தராகண்ட் செல்ல தயார் நிலையில் இருப்பதாகவும்  குறிப்பிட்டார்.

பிற குழுக்களும் விரைவில் அந்த பகுதியைச் சென்றடையும்.‌ இந்திய- திபெத் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்றடைந்திருப்பதாகவும், மாநில அரசின் நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அமித் ஷா கூறினார்.

ஜோஷிமத் அருகில் பனிப்பாறை திடீர் வெடிப்பு சம்பவத்தால் ஏற்பட்ட பனிச்சரிவால், தண்ணீரின் அளவு வேகமாக அதிகரித்து முதலில் ரிஷிகங்கா ஆற்றிலும், அதைத்தொடர்ந்து அலக்நந்தா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

உயிரிழந்தோர் பற்றிய முதல்கட்ட தகவல்கள் தெரியவந்திருப்பதாக அவர் கூறினார். இந்த நெருக்கடியான தருணத்தில் உத்தராகண்ட் மாநிலத்துடன், மத்திய அரசு துணை நிற்பதாகவும் இதிலிருந்து விரைவில் மீண்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

உத்தராகண்ட் முதலமைச்சரிடம் தாம் பேசி இருப்பதாகவும், விமானப் படையும் தயார் நிலையில் இருப்பதாகவும்  அமித் ஷா கூறினார். பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பேரிடர் மீட்புப் படையை நேரடியாக தொடர்பு கொண்டு ஆலோசனைகளை வழங்கியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உள்துறை இணை அமைச்சர் திரு நித்தியானந்த் ராய் தேசிய பேரிடர் மீட்புப் படையின் கண்காணிப்பு அறையிலிருந்து மீட்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார். தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், இந்த நிலைமை வெகு விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் அமித் ஷா உத்தரகாண்ட் மக்களுக்கு உறுதி அளித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்