ஒத்துழையாமை இயக்கத்தின் துவக்கமான சவுரி சவுரா’ நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை பிரதமர் துவங்கி வைக்கிறார்

பிரதமர் அலுவலகம் பிப்ரவரி 4 அன்று `சவுரி சவுரா’ நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்திரப்பிரதேசம் கோரக்பூரில் உள்ள சவுரி சவுராவில், இம்மாதம் 4ஆம் தேதியன்று (4.2.21), காலை 11 மணிக்கு, சவுரி சவுரா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களைக் காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வான `சவுரி சவுரா’ சம்பவம் நடந்து அன்றுடன் நூறு ஆண்டுகள் ஆகின்றன.

இந்த விழாவில், சவுரி சவுரா நூற்றாண்டிற்கான சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிடுகிறார். உத்திரப் பிரதேச  முதலமைச்சரும் விழாவில் கலந்து கொள்கிறார்.

2021 பிப்ரவரி 4ஆம் தேதி முதல் 2022 பிப்ரவரி 4 வரை, உத்திரப் பிரதேச மாநிலத்தின் அனைத்து 75 மாவட்டங்களிலும் நூற்றாண்டு விழா கொண்டாங்களையும், பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.உத்திரப்பிரதேசத்தில்  கோரக்பூர் மாவட்டம் சவுரி சவுரா நகர் வரலாற்றின் முக்கிய  இடமாகும்.இங்குதான் ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1922 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  5 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வின் காரணமாக பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த ஆங்கிலேய அரசுக்கு ஒத்துழைக்க மறுத்ததால் கடும் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.             சவுரி சவுரா ஷஹீத் ஸ்மரக் சமிதி 1973 ஆம் ஆண்டு இங்கு போரிட்ட வீரர்களுக்காக அவர்களின் நினைவாக கட்டப்பட்டது.ஒத்துழையாமை இயக்கம்  என்பது பிரித்தானிய இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமாகும். இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. மகாத்மா காந்தியாலும் இந்திய தேசிய காங்கிரசாலும் முன்னெடுக்கப்பட்ட இவ்வியக்கம் செப்டம்பர் 1920 இல் தொடங்கி பெப்ரவரி 1922 வரை தொடர்ந்தது. 

ரவ்லட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். இந்தியர்கள் காலனிய அரசுடன் அனைத்து செயல்பாடுகளிலும் ஒத்துழைக்க மறுத்தனர். மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் இருப்பது போன்ற செயல்கள் மூலம் அரசுக்கு ஓத்துழைப்பு தராமல் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அரசுப் போக்குவரத்து, பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட துணி முதலான பொருட்கள் போன்றவையும் இந்திய தேசியவாதிகளால் புறக்கணிக்கப்பட்டன. இவ்வியக்கத்தைக் காங்கிரசின் பல மூத்த தலைவர்கள் ஆதரிக்கவில்லை. எனினும் இளைய தலைமுறை தேசியவாதிகளிடையே இது பெரும் ஆதரவைப் பெற்றிருந்தது. ஒத்துழையாமையின் வெற்றியால் காந்தி இந்திய தேசிய காங்கிரசின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார்.

ஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்த போதே காந்தியால் திடீரென்று திருப்பிப் பெறப்பெற்றது.உத்திரப் பிரதேசத்தில் சௌரி சௌராவில் விடுதலை இயக்கத்தினருக்கும் பிரிட்டிஸ் காவல்துறையினருக்கும் மோதல்கள் ஏற்பட காவல் துறையினரின் செயல்பாட்டால் சில விடுதலை இயக்கத்தினர் மரணமடைந்தனர். இதில் கோபம் கொண்ட மற்றவர்கள் காவல் நிலையத்தைத் தீயிட்டுக் கொளுத்தியதில் 22 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். வன்முறை  வேறு சில பகுதிகளுக்கும் பரவியது. அறவழியில் நடந்து வந்த இயக்கம் வன்முறைப் பாதையில் செல்வதைக் கண்ட காந்தி அதிர்ச்சியடைந்தார். ஒத்துழையாமை இயக்கம் வன்முறை இயக்கமாக மாறுவதைத் தடுக்க, அதனை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். வன்முறை ஓயும் வரை மூன்று வாரங்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார். இதனால் ஒத்துழையாமை இயக்கம் வலுவிழந்து நின்று போனது.

ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப் பெற்றது காங்கிரசு உறுப்பினர்களிடையெ கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இச்செயல் பல தேசியவாத இளைஞர்களை ஆயுதப்புரட்சி இயக்கங்களில் சேரத்தூண்டியது. வன்முறையைத் தடுக்க காந்தி பாடுபட்டாலும் காலனிய பிரிட்டிஸ் அரசு அவர் மீது ஆட்சிவிரோத எழுத்துகளை வெளியிட்டார் என்று குற்றம் சாட்டி ஆறாண்டுகள் சிறையிலடைத்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்