காடுவெட்டி குருவின் மனைவி பாமக மீது குற்றச்சாட்டு

பாமகவிலிருந்து விலகிய காடுவெட்டி குருவின் மனைவிதனது மகன் கைது செய்யப்பட்டதற்கு பாமகவின் தூண்டுதலே காரணம் எனக் குற்றச்சாட்டு 

அரியலூர் மாவட்டம் படாநிலை அஞ்சல்  காடுவெட்டியில் மறைந்த வன்னியர் சங்கத்தின்  தலைவர் முன்னால் சட்டப்பேரவை உறுப்பினர்  காடுவெட்டி குருவின் மனைவி சுவர்ணலதா செய்தியாளர்களைச் சந்தித்த போது தனது கணவர் நினைவு நாள் மற்றும் பிறந்த நாளின் போது காவல்துறை அவரது நினைவிடத்திற்கு வருவதற்கு அனுமதிக்காமல் 144 தடை உத்தரவு போடுவது ஏன் என்றும் 

ஜெயலலிதா கருணாநிதியின் நினைவிடத்திற்கு 144 தடை உத்தரவு போடாத நிலையில் என் கணவரின் நினைவிடத்திற்கு வருவதற்கு மட்டும் தடை உத்தரவு போடுவது கண்டிக்கத்தக்கதெனவும் 

எனது மகன் கைது செய்யப்பட்டதற்கு பாமகவின் தூண்டுதலே காரணம்  உடனே விடுதலை செய்ய வேண்டும் இல்லையென்றால் அவரிடத்தில் நான் இருந்து மாவீரன் மஞ்சள் படை இயக்கத்தின் கொடிகளை கிராமங்கள்தோறும் ஏற்றுவேன் என கூறியதுடன் பாமக விற்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் கடந்த ஒரு வருடமாக இல்லை எனவும் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்