ஆகாசவாணி சங்கீத சம்மேளனம், இனி பாரத ரத்னா பண்டித பீம்சென் ஜோஷி என அழைக்கப்படும்

கலாசாரத்துறை அமைச்சகம் ஆகாசவாணி சங்கீத சம்மேளனம், இனி பாரத ரத்னா பண்டித பீம்சென் ஜோஷி பெயரில் அழைக்கப்படும்
மிகவும் மதிப்பு வாய்ந்த ஆகாசவாணி சங்கீத சம்மேளனம், இனி பாரத ரத்னா பண்டித பீம்சென் ஜோஷி பெயரில் அழைக்கப்படும்.

இது குறித்த அறிவிப்பை புனேவில் நடைபெற்ற பண்டித பீம்சென் ஜோஷி நூற்றாண்டு விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.

தன்னுடைய வழக்கமான இசை ஒலிபரப்புகளைத் தவிர, நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் பங்கு பெறும் ஆகாசவாணி சங்கீத சம்மேளனத்தை, பாரம்பரிய இசை ரசிகர்களுக்காக அகில இந்திய வானொலி நடத்துகிறது.

விழாவில் பேசிய திரு. ஜவடேகர், “பண்டித பீம்சென் ஜோஷியின் மிகப்பெரிய இசை களஞ்சியத்தின் கதவுகளை பொதுமக்களுக்காக தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி திறந்து விட்டுள்ளன.

யூடியூபிலும் தற்போது கிடைக்கும் இந்த பதிவுகளை, நாடு முழுவதுமுள்ள மக்களுக்கு கொண்டு சேர்க்க மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது,” என்றார்.

மேலும் பேசிய அவர், இசைக்கு பல்வேறு வடிவங்கள் உள்ளன என்றும், நமக்கு ஊக்கமளிக்கும் சக்தி அதற்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

“சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களுக்காகவும் பண்டித பீம்சென் ஜோஷி இசைப்பணி ஆற்றினார்,” என்று அமைச்சர் புகழாரம் சூட்டினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்