நாடு முழுவதும் உள்ள வரலாற்று சின்னங்களைப் பாதுகாக்க நடவடிக்கை
கலாசாரத்துறை அமைச்சகம் தமிழகத்தில் 412 உட்பட, நாடு முழுவதும் உள்ள வரலாற்று சின்னங்களைப் பாதுகாத்தல்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு பிரகலாத் சிங் படேல் கீழ்க்காணும் தகவல்களை அளித்தார்.

இந்திய தொல்பொருள் ஆய்வு துறையின் கீழ் தேசிய முக்கியத்துவம் பெற்ற 3693 சின்னங்கள் நாடு முழுவதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த இடங்களில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 412, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏழு உட்பட நாடு முழுவதும் உள்ள வரலாற்று சின்னங்களைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை தொல்பொருள் ஆய்வுத் துறை எடுத்து வருகிறது.

கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய முக்கியத்துவம் பெற்ற இடங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் செல்வதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சக்கர நாற்காலிகள், சாய்தளங்கள், பிரெய்ல் தகவல் பலகைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவக்கூடிய இதர வசதிகள் ஆகியவை கலாச்சார முக்கியத்துவம் பெற்ற இடங்களில் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, குடிதண்ணீர், கழிவறைகள், அறிவிப்பு பலகைகள் ஆகிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்