இரயில்வே அமைச்சகம்
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ரயில்வே, வர்த்தகம் & தொழில்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு. பியுஷ் கோயல், கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
மேற்கு மத்திய ரயில்வேயின் கீழ் வரும் ஹபிப்கஞ்ச் ரயில் நிலையம் மற்றும் மேற்கு ரயில்வேயின் கீழ் வரும் காந்திநகர் ரயில் நிலையம் ஆகியவற்றின் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையவுள்ளன.
வடக்கு ரயில்வேயின் கீழ் வரும் கோமதி நகர் ரயில் நிலையம் மற்றும் அயோத்தி ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலைய மறுசீரமைப்பு பணிகள் பெரும்பாலும் பொது, தனியார் கூட்டுமுறையில் செய்யப்படுகின்றன.
விவசாயிகளின் விளைபொருட்களை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான கிசான் ரயில் திட்டத்தின் கிழ் 24 வழித்தடங்களில் இது வரை ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
கிசான் ரயில் சேவை தொடங்கப்பட்ட 2020 ஆகஸ்ட் 7 முதல் 2021 பிப்ரவரி 5 வரை, 208 ரயில் சேவைகள் செயல்படுத்தப்பட்டு, சுமார் 68,000 டன்கள் எடையிலான அழுக்ககூடிய பொருட்கள் (பழங்கள், காய்கறிகள் உட்பட) பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கொவிட் ஊரடங்கின் காரணமாக 2020 மார்ச் 23 அன்று ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதில் இருந்து, ஒரு நாளைக்கு சுமார் 3635 பயணிகள் ரயில் சேவைகளையும், 5881 புறநகர் ரயில் சேவைகளையும் இந்திய ரயில்வே இயக்கி வந்தது.
2015-16-ல் 675.61 மில்லியன் ஆக இருந்த இந்திய அளவிலான மாதாந்திர சராசரி பயணிகள் பதிவு எண்ணிக்கை, 2019-20-ஆம் ஆண்டில் 673.81 ஆக இருந்தது.
தெற்கு ரயில்வேயை பொருத்தவரை, 2015-16-இல் 66.55 மில்லியன் ஆக இருந்த இந்திய அளவிலான மாதாந்திர சராசரி பயணிகள் பதிவு எண்ணிக்கை, 2019-20-ஆம் ஆண்டில் 66.67 ஆக இருந்தது.
கொவிட் கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ஒரு நாளைக்கு சுமார் 206 பயணிகள் ரயில் சேவைகளையும், 5350 புறநகர் ரயில் சேவைகளையும் இந்திய ரயில்வே இயக்கி வருகிறது.
கருத்துகள்