கோயமுத்தூர் திமுக கூட்டத்தில் பேசிமுடித்த நாஞ்சில் சம்பத் கைது


இந்த ஆட்சி முட்டாள்களின் சொர்க்கம் எனப் பேசிய திமுகவின்  நாஞ்சில் சம்பத் கைது

உள்ளாட்சித்துறையின் சீர்கேட்டையும்,அதன் அமைச்சரையும்  கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டார்

இந்த ஆட்சி முட்டாள்களின் சொர்க்கத்தில் உள்ளது எனவும், 

இவர்களுக்கு குழி தோண்டப்பட்டுள்ளதெனவும் ,

இந்த ஆட்சி புதைக்கப்படப் போகின்றது எனவும்,

கோயமுத்தூர் கிழக்கு மாவட்டத் திமுகவின் குறிச்சி பகுதி சார்பில், அடிப்படை வசதிகள் செய்து தராத அரசு மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சரைக் கண்டித்து கோயமுத்தூர் சுந்தராபுரம், சங்கம் வீதியில், மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில்  பகுதி கழகப் பொறுப்பாளர்களான கார்த்திகேயன், எஸ்ஏ.காதர்  முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கண்டன  ஆர்ப்பாட்டத்தில், திமுக தலைமை கழக சிறப்புப்  பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்ட மேடையில் இருந்து கீழே வந்த நாஞ்சில் சம்பத்தை காவல்துறையினர் கைது செய்ததையடுத்து, நாஞ்சில் சம்பத்தை கொண்டு செல்லும் காவல்துறை வாகனத்தை திமுகவினர் சேர்ந்து  முற்றுகையிட்டதைத் தொடர்ந்து பொள்ளாச்சி சாலையில் 300 க்கும் மேற்பட்ட திமுகவினர் மறியலும் போராட்டத்தில் ஈடுபட்டவே, காவல்துறையினர் திமுகவினரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்ய முற்பட்டதையடுத்து, அதிகளவிலான திமுகவினர்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, நாஞ்சில் சம்பத் பேட்டியின்போது கூறுகையில்;-

அடக்குமுறைச் சட்டங்களை ருசி பார்த்துள்ளேன். ஆபத்துக்களைக் கடந்துள்ளேன். தமிழகத்திலுள்ள, 8 மத்திய சிறைச்சாலைகளில் சுவாசம் செய்துள்ளேன். என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்