அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்கள் பணிக்கு நேர்காணல்

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்கள் பணிக்கு நேர்காணல்


அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவர் பொறுப்புக்கு, “நேரடி ஆட்தேர்வு” நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள நபர்கள் அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம், தாம்பரம் கோட்டம், சென்னை 600045 என்ற முகவரியில் 2021 பிப்ரவரி 25 அன்று காலை 11 மணிக்கு நேரில் வரலாம்.

கீழ்காணும் தகுதியுடையோர் அஞ்சலக ஆயுள் காப்பீடு / கிராமப்புற அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர்களாக தேர்வு செய்யப்படுவதற்கான நேர்முக ஆட்தேர்வில் பங்கேற்கலாம்.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கான வயது வரம்பு 18-லிருந்து 50 வரை. 

வேலைவாய்ப்பற்றோர் / சுயவேலைவாய்ப்பு பெற்ற படித்த இளைஞர்கள், முன்னாள் வாழ்வியல் ஆலோசகர்கள் / எந்தவொரு காப்பீட்டு நிறுவனங்களின் முன்னாள் ஏஜென்டுகள், முன்னாள் படைவீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகிளா மண்டல பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், சுயஉதவிக் குழுவினர், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என மேற்காணும் தகுதியுடைய, விருப்பமுள்ள எந்தவொரு நபரும் நேர்முக ஆட்தேர்வில் பங்கேற்கலாம்.

மேற்கண்ட தகவல்களை செய்தி குறிப்பு ஒன்றில் அஞ்சல் கண்காணிப்பாளர், சென்னை மாநகரம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்