முதல்வர் அறிவித்த கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடியும் ஓய்வு பெறும் வயதுக்கு வரப்போகும் அறிவிப்பும்

தமிழக கூட்டுறவு வங்கிகளில்  விவசாயிகள் வாங்கிய 12,000 க்கும் மேற்பட்ட  கோடி மதிப்புள்ள கடன்கள் தள்ளுபடி என முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி சட்டசபையில் நேற்று  அறிவித்தார். இதந் மூலம் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று தனது உரையில் தெரிவித்தார்.

சட்டசபை 110 வது விதியின் கீழ் நேற்று வெளியிட்ட பின் பட்டா உள்ள  விவசாயிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாய கடன் தள்ளுபடி சலுகை பெறுவதற்கு  கடன் வாங்கிய விவசாயிகள் இதற்கு எந்த ஒரு நடைமுறையும் பின்பற்ற வேண்டியதில்லை. கூட்டுறவு சங்கங்கள் தங்களிடம் குறிப்பிட்ட காலத்திற்குள் யார் யார் கடன் வாங்கியுள்ளார் என்று பார்த்து, அவர்களது பட்டியலைத் தயார் செய்து விவசாயிகளின் வீடுகளுக்கே, அறிவிப்பு  அனுப்பும். அதில் நீங்கள் எங்களிடம் பெற்ற விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற அறிவிப்பு இருக்கும். இந்த அறிவிப்பை விவசாயிகள் பத்திரப்படுத்த வேண்டும். வருங்காலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், இது ஆவணமாக பயன்படும்.பொங்கலுக்குக் கொடுத்த ₹ 2500. எப்படிச் செய்தியானதோ.அதேபோல்தான்விவசாயக் கடன் தள்ளுபடியும். 12 ஆயிரம் கோடி தேவை.             
அதோடு இன்று புதிதாகதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருப்பதை வயது வரம்பு, 59 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது 60 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதே கோரிக்கையை தான் பல வருடங்களாக அரசு ஊழியர்கள் எழுப்பி வந்தனர். முதலில், ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டபோது, 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் கூடுதலாக ஓராண்டு பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. மத்திய அரசு ஊழியர்களைப் போல தங்களுக்கும் ஓய்வு பெறும் வயதை 60 ஆக அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். தமிழக முதல்வர் இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி  இன்று அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும்  தெரிகிறது. ஆக எதிர்க்கட்சிகள் விமர்சனம் தேர்தல் முன்னிருத்தி செயல்படும் திட்டம் என்பது அரசியல் பார்வையாகிறாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்