போர் விமானங்கள் பராமரிப்பதில் உள்நாட்டு தயாரிப்புக்கு விமானப்படை ஊக்கம்பாதுகாப்பு அமைச்சகம் போர் விமானங்கள் பராமரிப்பதில் உள்நாட்டு தயாரிப்புக்கு விமானப்படை ஊக்கம்

போர் விமானங்களில் பராமரிப்பில், தற்சார்பு நிலையை அடைய, உள்நாட்டு தயாரிப்புக்கு விமானப்படை உந்துதல் அளிக்கிறது.

இந்திய விமானப்படையில் மிக்-21 முதல் ரபேல் வரை வெளிநாட்தில் தயாரான போர் விமானங்கள் உள்ளன. இதன் பராமரிப்பு, உதரி பாகங்களுக்கு வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டியுள்ளதால், இவற்றில்  தற்சார்பு  நிலையை அடைவதில் விமானப்படை அதிகம் கவனம் செலுத்துகிறது.

விமானப்படைக்கு தேவையான உதிரிபாங்களை இந்திய ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுபாப்பு தொழில் துறைகள் குறிப்பாக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆகியவை உற்பத்தி செய்ய இந்திய விமானப்படை உந்துதல் அளிக்கிறது. இதற்காக 4,000 உதிரி பாங்கங்களை, உள்நாட்டில் தயாரிப்பதற்கு விமானப்படை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது.

இந்த தேவைகளுக்காக, மத்திய அரசின் பொது கொள்முதல் இணையதளம் மூலம் வெளியிடப்பட்ட ஒப்பந்த கோரிக்கை விவரங்கள் விமானப்படை இணையளம் indianairforce.nic.in -ல் உள்ளது. மேலும், அதிகமுள்ள 200 ஏற்றுமதி-இறக்குதி உதிரிபாகங்கள் பட்டியல் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் இணையளம் srijandefence.gov.in -ல் உள்ளது.

விமானப்படை தளபதிகள் கருத்தரங்கு:

பாதுகாப்த்துறை ஒத்துழைப்பை மேம்படுத்த பெங்களூரில் உள்ள எலகங்கா விமானப்படை தளத்தில் விமானப்படை தளபதிகளின் கருத்தரங்கை இந்திய விமானப்படை  பிப்ரவரி 3, 4 ஆகிய தேதிகளில் நடத்துகிறது. இதில் பல நாட்டு விமானப்படை தளபதிகள் கலந்து கொண்டு, விமானப்படையில் உத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்