முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வி.கே.சசிக்கலா நடராஜன் நாளை தமிழக வருகை இலக்கிய நடையில் கட்டியம் கூறிய பழ.கருப்பையா


வி.கே.சசிக்கலா நடராஜன்  நாளை தமிழகம் வர உள்ளார் 









வருகையை முன்னிட்டு கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வரவேற்பு ஏற்பாடுகளுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள நுழைவு வாயில் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரப் பகுதியில் கூடுதலாக சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தமிழக எல்லையிலிருந்து சசிகலா தங்கவிருக்கும் தி.நகர் இல்லம் வரை 30 க்கும் மேற்பட்ட இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க அமமுகவினர் திட்டமிட்டுள்ளனர். கிண்டியிலிருந்து ஜெயலலிதா நினைவிடம் சென்றால் மேலும் 17 இடங்களிலும், இல்லையெனில் மேலும் 7 இடங்களிலும் சென்னைக்குள் வரவேற்பு அளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை முழுவதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது  வருகை காரணமாக  பிரசாரத்தை ரத்து செய்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

வி.கே.சசிகலா நடராஜன்  வருகையை முன்னிட்டு கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்த நிலையில், வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் பிரச்சாரப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டம் வழியாக சசிகலா நடராஜன்  தமிழகம் வருவதால், அந்த சமயத்தில் அப்பகுதியில் பிரசாரம் மேற்கொண்டால் ஏதேனும் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் முதல்வரின் பிரசாரத் திட்டத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதா விவரம் அறிந்தவர்களின் தகவல்.""வஞ்சினம் கூறுதல்"

வி.கே. சசிகலா நடராஜன்  அன்றைக்கு சமாதியில் சபதம் செய்தததை பார்த்தவர்களுக்கு ஒன்றும் புரிந்திருக்காது. அதற்கு பெயர் வஞ்சினம் கூறுதல்

என்னையோ, என் குடும்பத்தையோ, என் நாட்டையோ அழித்த ஒருவன் மீது நான் போர் தொடுத்து, அவன் முற்றாக அழிந்தபின் மீண்டும் நான் இந்த இடத்திற்கு வருவேன். அப்படி இல்லை என்றால் நான் இன்ன கதிக்கு ஆளாவேன் என்று சமாதியிலோ, தெய்வத்தின் முன்போ, நாட்டின் முன்போ நின்று அறைந்து கூறுவது தான் வஞ்சினம் கூறுதல். 

அது புறநானூற்றில் இருக்கிற, தமிழருடைய அடிப்படை பண்பாடு. அந்தப்பழக்கம் இப்போது இல்லை. அது போர் சமூகத்திற்கு உரிய பண்பாடு. வழிவழியாக போர் செய்கிறவர்களுக்கு இந்த வஞ்சினம் கூறுதல் என்ற பண்பு இருக்கும். வி.கே. சசிகலா நடராஜனுக்கும் அது பழக்கத்திலேயே, இரத்தத்திலேயே இருக்கிறது." என  முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா பேசியுள்ளார்.

பகைவரது மதிலை அழித்த மன்னன் தனது வாளைப் புண்ணிய நீராட்டுவான். முடிசூடித் தானும் புண்ணிய நீராடுவான். முடிபுனைந்த நாளை ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடுவான்.வஞ்சியார் எனப்படும் வஞ்சி மாலை அணிந்த வீரர்கள் பகைவரது நாட்டு எல்லையுள் புகுந்து போருக்கு அடியிடுவர். ஊரை நெருப்பிட்டுக் கொளுத்துவர். ஊர் மனைகளில் கொள்ளையும் இடுவர். கரும்பும், நெல்லும் செழித்த வயல்களில் நெருப்பு மூட்டி அழிப்பர். நீர் தேக்கி வைத்த குளம் முதலியவற்றின் கரைகளை உடைத்துவிடுவர். உழிஞை மறவர் பகைவரது கோட்டைகளை இடித்துத் தரை மட்டமாக்கிக் கழுதை ஏர் கொண்டு உழுவர்; கவடு விதைப்பர். மற்றொரு வகையில் இரு திறத்து மன்னரும் தும்பைப் பூச்சூடி போருக்குச் செல்லுங்கால் போர் ஊருக்குள் நடைபெறாமல் குறிப்பிட்ட ஒரு போர்க்களத்தில் நடைபெறும். இரு திறத்துப் படைகளும் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் இரு திறத்தாருக்குமே மிக்க அழிவு ஏற்படும்படைவீரர்களான மறவர்கள் தம் அரசர் முன்னும் பகை மறவர்களின் முன்னும் நெடுமொழி (தற்பெருமை) கூறிக் கொள்வர். தனது மாமன்னனுக்குத் தன்னுடைய மேம்பாட்டை வீரன் ஒருவன் தானே எடுத்து உரைப்பது நெடுமொழி கூறல் எனப்படும். மன்னர்கள் போர் தொடங்கும் முன் வஞ்சினம் மொழிவர். வஞ்சினம் என்பது 'இன்னது செய்வேன் நான். அவ்வாறு செய்யேனாயின் இன்னன் ஆகுக' என்று வலிய சினத்தில் கூறும் சொல் ஆகும்.சங்க காலத்தில் தமிழர் போர் மரபுகள் அறப்போர் முறையைச் சார்ந்ததே ஆகும். அகம், புறம் என வாழ்வை இரண்டாகப் பகுத்து புறம் என்று போர்முறைகளுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர். அவர்களது போர்முறை நேர்மையாக இருந்தது. காலை சூரிய உதயத்தின் போது, முரசறைந்து போர் தொடங்குவர். சூரியன் மறையும் வரை மட்டுமே போர் நடைபெற்றது. பின் முரசறைந்து போரை நிறுத்துவர். எத்துனை நாள் போராயினும் இதுவே வழக்கானது. பகைவர் ஆயுதத்தை இழந்த போதும், போரில் தோற்றோடும் போதும் அவர் மேல் படை செலுத்தாத அறநெறி இருந்தது. அவர்களுக்கு தகுந்த வாய்ப்பளிக்க மறுநாள் போர் செய்தனர். ஓடி ஒளிந்தாரைக் கொல்லாமல் அவர்கள் வரும் வரை காத்திருந்து போர் புரியும் வீரம் இருந்தது. இறந்தோருக்கு இரங்கும் குணம் இருந்தது.இலக்கியத்தில் பதில் தந்த பழ.கருப்பையா கூற்று உண்மை தான் அது பலவாறு வரலாற்றிலும் உண்டு.

அப்பாவின் திடீர் மரணத்தையொட்டி பாண்டிய இளவரசன் நெடுஞ்செழியனுக்கு அரியணை ஏறியே ஆகவேண்டிய அவசர நிலை, பாலகர்கள் அணியும் ஐம்படைத் தாலி எனும் அணிகலனைக் கூட இன்னும் காலிலிருந்து கழற்றியிருக்கவில்லை. அதற்குள் குருவி தலையில் பனங்காய் போல பெரும் அரசப் பொறுப்பு, அவனும் தட்டிக்கழிக்கவில்லை. விளையாட்டுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு வையம் ஆளும் பொறுப்பை துணிச்சலாக ஏற்றுக்கொண்டான்.

மதுரை 

பாண்டிநாட்டு அரியணையில் பச்சிளம் பாலகனா!  எதிரிகளுக்கெல்லாம் கொண்டாட்டம். பட்டொளிவீசிப் பறக்கும் பாண்டியரின் கயற்கொடியை கம்பத்தோடு வெட்டிச்சாய்க்க இதைவிட சிறந்த தருணம் கிடைக்குமா? பாண்டியன் பாலகனாய் இருந்தாலும் அவன் படை பெரிதல்லவா! எனவே ஏழுபேர் சேர்ந்தார்கள். இரண்டு முடியுடை பேரரசர்கள், ஐந்து குறுநில மன்னர்கள்…

சோழ மன்னன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, வேளிர் நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் இப்படி எழுவர்…இந்த எழுவரும் தனக்கு விரோதமாக எழுவர் என்பதை செழியன் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்கவில்லை. ஒற்றர் மூலமாக செய்தி வருகிறது. வெகுண்டெழுகிறான், கண்ணில் தீக்கனல் தெறிக்க புலவர் சான்றோர் முன்னிலையில் வஞ்சினம் கூறுகிறான்.

வஞ்சினம் கூறுதல் என்றால் என்ன? வேறொன்றுமில்லை நம் தமிழ்பட ஹீரோக்கள் இண்டர்வெல்லுக்கு முன்னாக தொடையில் தட்டி சபதமெடுப்பார்களே அதுதான் இது. நான் இதை செய்யவில்லையென்றால் எனக்கு இன்னின்னது நேரட்டும் என்று ஆன்றோர் அவையில் கூறுவதுதான் வஞ்சினம். செழியன் கூறிய வஞ்சினம் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

என்னைப் பழிக்கிறயா, என் மண்ணைப் பழிக்கிறாயா! உன் கூட்டாளிகளோடு சேர்ந்துவா!

உன்னை சிதறடிப்பேன், எல்லோரையும் சிறைப்பிடிப்பேன், என் காலின்கீழ் மடங்கடிப்பேன்

இல்லாவிட்டால்….!

கையாலாகாத காவலனென என் மக்கள் என்னை இகழட்டும், எம் புலவர் இந்த மண்ணைப் பாடாதொழியட்டும்

இரவலர்க்கு வழங்க இயலா வறுமை என்னைப் பிடிக்கட்டும்…

பாண்டியன் பகைவர் சவாலை ஏற்றவுடன் பாண்டியநாடு போர்க்கோலம் பூண்டது, சிறுவனான நெடுஞ்செழியன் தன் குலத்துக்குரிய வேப்பந்தளிரை சூடிக்கொண்டு, முற்றுகை இட்டிருக்கும் பகைவரை தகர்க்கப் போகும் மன்னர்கள் அணியும் மரபுப்படி உழிஞைக் கொடியையும் அணிந்தவனாய் படைக்கு தலைமையேற்க, கயல்கொடி ஏந்தி, போர்முரசொலிக்க நாட்டின் வடக்கு எல்லையை நோக்கி சீறிக்கிளம்பியது பாண்டியர் பெரும்படை.

கிரேக்க ரோமானியப் படைகளையொத்த கட்டுக்கோப்பையும் ஒழுங்குமுறையையும் கொண்ட படை என்று பாண்டியர் படைக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு, வீரர்கள் போர்ச்சீருடை அணிந்திருந்தார்கள். கார்மேகங்கள் மோதி இடியிடிப்பது போல களிறுகளும் இரதங்களும் ஒன்றுடன் ஒன்று மோத சோழ, பாண்டிய நாட்டின் எல்லையருகே மூண்டது அந்தப் பெரும்போர்

ஒரு மதயானையைப் பாலகன் என்று கருதிய பிழை அப்போதுதான் எதிரிகளுக்கு புரிந்தது. நெடுஞ்செழியன் களமாடிய காட்சியைக் கண்ட பாண்டிய வீரர்களே வெலவெலத்துப் போனார்கள். சிறுவன் என்று நினைத்த தம் வேந்தனே வெறிகொண்ட வேங்கைபோல வேட்டையாடுவதைக் காணும்போது இரத்தத்தில் வீரம் செறிந்த பாண்டிய வீரர்களைச் சொல்லவும் வேண்டுமா? எதிரிகளை சிதறடித்தார்கள். எதிரிகள் புறமுதுகிட்டு சோழநாட்டின் எல்லைகளுக்குள் புகுந்தார்கள்.

அந்த இடத்துக்குப் பெயர் தலையாலங்கானம்…

அந்தந்த நாட்டு மன்னர்களே தத்தம் படைக்கு தலைவராக நின்று போரிட்டனர். அதுவரையில் வராமல் தாமதமான பிற படைகளும் வந்து சேரவே, தன்னுடைய எல்லைக்குள்ளே பாண்டியன் படையும் வந்துவிட்டமையால் எப்படியாவது சுற்றி வளைத்துத் தொலைத்துவிடலாம் என்று நம்பினான் சோழன். மற்றவர்களுக்கும் உற்சாகமூட்டினான். ஆனால் அவன் கனவு பலிக்கவில்லை.

பாண்டியன் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முதலாவது வேளிர் படையினர் சோர்ந்து போனார்கள். “எவனுக்காகவோ வந்து இவன்கிட்ட நாம ஏன் தர்ம அடி வாங்கணும்?!” என்ற எண்ணம் அவர்களில் பலரை பற்றிப் பிடிக்கவே சோழ மன்னன் கொடுத்த உற்சாக உபதேசங்களையெல்லாம் காதில் வாங்காமல் பின்னங்கால் பிடறியில் அடிக்க படையை விட்டு ஓடிப்போனார்கள். சோழர் படையைத் தவிர கடைசிவரை ஈடுகொடுத்து அடிக்கும் துணிவு வேறு யாருக்கும் வரவில்லை. சேரன் ஆயுதங்களையெல்லாம் போட்டுவிட்டு தலை தப்பியது தம்புரான் புண்ணியம் என்று ஓடி ஒளிந்து கொண்டான்

கடைசியில் சோழனுக்கு சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை, கன்னிப்போரில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி செழியனுக்கு! … வீரர்கள் அவனைத் தோளில் தூக்கிவைத்து ஆரவரித்துக் கொண்டாடினர். சோழனும் பிறரும் பணிந்து அளித்த பொருள்களுடனும், அங்கங்கே வாரிக் கொண்ட பண்டங்களுடனும் வீரர்கள் மதுரைக்குத் திரும்ப மாநகரம் விழாக்கோலம் பூண்டது.

ஏற்கனவே அரசனை அணுவணுவாக இரசித்து பாடல் வடிக்கும் புலவர்களை கேட்கவும் வேண்டுமா! மாங்குடி மருதனைத் தலைவராகக் கொண்ட புலவர் சங்கத்தினர் பாண்டியனை தமிழ் மழையில் நனைத்தார்கள். பாடல்களை எழுதிக் குவித்தார்கள். நெடுஞ்செழியனுக்கு “தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்” என்ற புகழ்ப் பெயர் சூட்டப்பட்டது.

போரில் தீரம் காட்டிய வீரர்களுக்கு பரிசுகளையும் பட்டங்களையும் வாரிவழங்கினான் செழியன், படைத்தலைவர்களுக்கு ஏனாதி, நம்பி என்ற சிறப்பு பெயர்கள் சூட்டப்பட்டது. போரில் விவேகம் காட்டி வழிநடத்திய மந்திரிகளுக்கு காவிதி எனும் பட்டம் அளிக்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...