கலப்புத் திருமணம் செய்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு விருப்பத்தின் பேரில் சாதிச் சான்று அரசாணை

சிறப்புச் செய்தி : இராமமூர்த்தி,வழக்கறிஞர். கலப்புத் திருமணம் செய்து கொண்ட பெற்றோர்களின் குழந்தைகளுக்கு அவர்களது விருப்பத்தின் பேரில் தாய் அல்லது தந்தை சாதியின் அடிப்படையில் சாதிச் சான்று 

வழங்கலாம் என்று தெளிவுரை வழங்கி அரசாணை பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியீடு .தமிழக அரசு  பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர் நலத்துறையின்  முதன்மைச்  செயலாளர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை.

தமிழக ஆதிதிராவிட, பழங்குடியினர் மற்றும்  பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட   மக்களுக்கு அவ்வப்போதய நிலைப்படி  அரசு சலுகைகளை விரிவாக்கம் செய்கிறது. இதில் கலப்பு திருமணத்தால் பிறக்கும் குழந்தையின் பெற்றோர்கள்  முடிவு செய்வதற்கு ஏற்ப, தந்தை அல்லது தாயின் சமுதாயத்தைச்  சேர்ந்ததாக அறிவிக்க தமிழக அரசு சார்பில்  அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்த

 நிலையில், சிலர் சார்பில் வந்த கோரிக்கைப்படி, 

அதை அரசு பரிசீலித்தது. கலப்புத்திருமணம் முடித்த, இருவேறு சாதியைச் சேர்ந்த தந்தைக்கும்- தாய்க்கும் பிறக்கும் குழந்தைக்கு சாதியை, அதன் பெற்றோரின் முடிவுக்கு ஏற்ப பரிசீலிக்கலாம் என அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, பெற்றோரின் கொரிக்கையின் அடிப்படையில், அவர்கள் குழந்தைக்கான சாதிச்சான்றிதழை (பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகப் பிற்படுத்தப்பட்டோர் அல்லது இதர பிற்படுத்தப்பட்டோர் அல்லது ஆதிதிராவிடர் அல்லது பழங்குடிகள்  ஆகியவை) வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் பெறலாம் என அரசாணை வெளியிடப்பட்டது.தற்போது ஜாதியின் பெயரில் அமைப்பு அல்லது அரசியல்  இயக்கம் நடத்தும் பல தலைவர்கள் கலப்புத்திருமணம் செய்தவர்கள் தான் அவர்கள் நீண்ட காலமாக இதே கோரிக்கைகளை மறைமுகமாக முன்வைத்து வந்த நிலையில் இந்த அரசாணை அவர்களை அவர்கள் பிள்ளைகளை  அரசுப்பணிக்கு சலுகைகள் பெற இந்த அரசாணை உதவலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்