கோழிப்பண்ணை தொழில் மீது பறவைக் காய்ச்சல் ஏற்படுத்திய தாக்கம்

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம் கோழிப்பண்ணை தொழில் மீது பறவைக் காய்ச்சல் ஏற்படுத்திய தாக்கம்
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் திரு சஞ்சீவ் குமார் பல்யான், கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

கேரளா, ஹரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்திஸ்கர், குஜராத், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான், தில்லி மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டது.

இருந்த போதிலும், ஹரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களே பறவைக் காய்ச்சல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டன.

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி 4,49,271 பண்ணைப் பறவைகள் பறவைக் காய்ச்சல் காரணமாக அழிக்கப்பட்டன. இதன் காரணமாக, பண்ணை பொருட்களின் நுகர்வு குறைந்தது. பண்ணை தொழிலில் உள்ளவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது.

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் அளித்த தகவலின் படி, ஒரு வருடத்தில் சுமார் 1,655 மில்லியன் டன்கள் சாணம் மாட்டினங்களில் இருந்து நமது நாட்டில் பெறப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான சாணம் உரமாக பயன்படுத்தப்படுகிறது.

தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் ‘கோபந்தன் கழிவிலிருந்து வளம்’ என்னும் திட்டத்தை இந்திய அரசு தொடங்கியது. மேலும், விலங்கு கழிவுகளில் இருந்து பல்வேறு வகைகளில் உரங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு உருவாக்கியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்