பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
எல்லையோர பிரச்சினைகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடியால் சிறப்பு கவனம் வழங்கப்படுகிறது: டாக்டர் ஜிதேந்திர சிங்
பிரதமர் திரு நரேந்திர மோடியாலும், 2014-இல் இந்த அரசு பதவி ஏற்றதில் இருந்தும் எல்லையோர பிரச்சினைகள் சிறப்பு கவனம் பெற்றுள்ளன என்று மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
”கல்வி வளாகமும் எல்லையோர பாதுகாப்பும்” என்னும் தலைப்பில் தில்லி பல்கலைக்கழக ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எல்லைப்புறங்களில் பணியாற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அங்கு வாழும் மக்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
கருத்துகள்