முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'பகவத்கீதையால் ஈர்க்கப்பட்டவர்கள் இரக்கமுள்ளவர்களாக இருப்பார்கள்'. பிரதமர் நரேந்திரமோடி.

பிரதமர் அலுவலகம்                                       'பகவத்கீதையால் ஈர்க்கப்பட்டவர்கள் இரக்கமுள்ளவர்களாக இருப்பார்கள்'. பிரதமர் நரேந்திரமோடி.     




            

சுவாமி சித்பவானந்தாவின் பகவத் கீதை மின்னணு பதிப்பு வெளியீட்டு விழாவில் பிரதமரின் உரை

மதிப்பிற்குரிய விருந்தினர்களே,

நண்பர்களே !

வணக்கம்!

இது தனிச்சிறப்பான நிகழ்ச்சி.  சுவாமி சித்பவானந்தாவின் வர்ணனையுடன் கூடிய பகவத் கீதை மின்னணு பதிப்பு வெளியிடப்படுகிறது.  இப்பணியில் ஈடுபட்ட அனைவரையும் நான் பாராட்டுகிறேன். பாரம்பரியத்தையும், தொழில்நுட்பத்தையும் இணைத்துள்ள இந்த முயற்சிக்கு நன்றி. இளைஞர்களிடையே மின்னணு பதிப்புகள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. ஆகையால், இந்த முயற்சி பகவத் கீதையின் உயர்ந்த சிந்தனைகளுடன் அதிக இளைஞர்களை இணைக்கும்.

நண்பர்களே,

என்றும் நிலையான பகவத் கீதை மற்றும் புகழ்பெற்ற தமிழ் கலாச்சாரத்துக்கு இடையேயான இணைப்பை இந்த மின்னணு பதிப்பு அதிகரிக்கும். இதை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எளிதில் படிக்க முடியும். பல துறைகளில் தமிழர்கள் புதிய உச்சத்துக்கு சென்றுள்ளனர். ஆனாலும், அவர்கள் தங்கள் கலாச்சாரத்தால் பெருமிதம் கொள்கின்றனர். அவர்கள் எங்கு சென்றாலும், தங்களுடன் சிறந்த தமிழ் கலாச்சாரத்தையும் கொண்டு செல்கின்றனர்.

நண்பர்களே,

நான் சுவாமி சித்பவானந்தாவை வணங்குகிறேன். இந்தியாவின் மீளுருவாக்கத்துக்கு, அவர் தனது மனம், உடல், இதயம் மற்றும் ஆன்மா என தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவர் வெளிநாட்டில் படிக்க திட்டமிட்டார், ஆனால், விதி அவருக்கு வேறு பல திட்டங்களை வைத்திருந்தது.  தெருவோர புத்தகக் கடையில் பார்த்த ‘சுவாமி விவேகானந்தரின் மெட்ராஸ் உரைகள்’ புத்தகம் அவரது வாழ்க்கை பாதையை மாற்றியது. எல்லாவற்றையும் விட நாடு மற்றும் மக்களுக்கு சேவை செய்வது தான் மேலானது என அந்த புத்தகம் அவரை ஊக்குவித்தது.

‘‘சிறந்த மனிதர்கள் என்ன செய்தாலும், அதை பின்பற்றும் படி பலர் ஊக்குவிக்கப்படுகின்றனர்’’ என பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். ஒரு புறம் சுவாமி சித்பவானந்தா, சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டார். மற்றொரு புறம், அவர் தனது உயர்ந்த செயல்களால், உலகை கவர்ந்தார்.  சுவாமி சித்பவானந்தரின் உன்னதமான பணியை, ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் ஆசிரமம் முன்னோக்கி கொண்டு செல்கிறது. சமூக சேவை, கல்வி மற்றும் சுகாதாரத்தில், அவர்கள் பாராட்டத்தக்க பணியை செய்கின்றனர். ராமகிருஷ்ண தபோவனம் ஆசிரமத்தை நான் பாராட்டுகிறேன், அதன் எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துகிறேன்.

நண்பர்களே,

பகவத் கீதையின் அழகு அதன் ஆழம், பன்முகத்தன்மை மற்றும்  நெகிழ்வுத்தன்மையில் உள்ளது. கீதையை தாய் என்றும், தான் தடுமாறினால் மடியில் தூக்கி வைத்துக் கொள்ளும் எனவும் ஆச்சார்ய வினோபா பவே கூறினார். மகாத்மா காந்தி, லோக்மான்ய திலகர், மகாகவி சுப்பிரமணிய பாரதி போன்ற மகான்கள் எல்லாம் பகவத் கீதையால் ஈர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள். கீதை நம்மை சிந்திக்க வைக்கிறது. நம்மை கேள்வி கேட்க வைக்கிறது.  விவாதத்தை ஊக்குவிக்கிறது. கீதை, நமது மனதை திறந்திருக்க வைக்கிறது. கீதையால் ஈர்க்கப்பட்ட எவரும் எப்போதும் இரக்கமுள்ளவர்களாகவும், ஜனநாயக மனநிலையுடனும்  இருப்பர்.

நண்பர்களே,

பகவத் கீதை போன்ற ஒன்று,  அமைதியான மற்றும் அழகான சூழலில் வந்திருக்கும் என ஒருவர் நினைக்கலாம். ஆனால், நீங்கள் அனைவரும் அறிந்தபடி, ஒரு மோதலுக்கு இடையே தான், இந்த உலகம் ஒரு அருமையான வாழ்க்கை பாடத்தை பகவத் கீதை வடிவில் பெற்றது.

அறிவின் ஆதாரமாக கீதை உள்ளது. அதிலிருந்து நாம் அனைத்தையும் பெறலாம். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணரின் வார்த்தைகளில் இந்த அறிவு வெளிப்படுவதற்கு என்ன  காரணம் என்று நீங்கள் எப்போதாவது நினைத்து பார்த்திருக்கிறீர்களா? இதற்கு சோகம் தான் காரணம்.  சிந்தனைகளின் பொக்கிஷம் பகவத் கீதை. அது சோகத்திலிருந்து வெற்றியின் பயணத்தை வெளிப்படுத்துகிறது.  பகவத் கீதை தோன்றியபோது, மோதல் நிலவியது. சோகம் இருந்தது. தற்போது மனிதகுலம், இதே போன்ற பல மோதல்களையும், சவால்களையும் கடந்து செல்கிறது என பலர் நினைக்கலாம். வாழ்நாளில் ஒரே முறை ஏற்பட்ட உலகளாவிய தொற்றை எதிர்த்து உலகம் போராடிக் கொண்டிருக்கிறது.  பொருளாதார மற்றும் சமூக தாக்கங்கள் அதிகளவில் உள்ளன.  இதுபோன்ற நேரத்தில், ஸ்ரீமத் பகவத் கீதையில் காட்டப்பட்ட வழி, எப்போதும் பொருத்தமானதாக உள்ளது. மனிதகுலம் சந்திக்கும் சவால்களில் இருந்து மீண்டும் வெற்றி பெறுவதை நோக்கி செல்வதற்கான பலத்தை இது வழங்கும்.  இது போன்ற பல உதாரணங்களை நாம் இந்தியாவில் பார்த்தோம்.  கொவிட்-19-க்கு எதிரான நமது மக்களின் போராட்டம்,  ஊக்கம், தைரியம் ஆகிவற்றக்கு பின்னால், பகவத் கீதை தெரிவித்த விஷயங்கள் உள்ளன என கூற முடியும். தன்னலமற்ற உணர்வு இதில் உள்ளது. ஒருவருக்கு ஒருவர் உதவ நமது மக்கள் சென்றபோது நாம் இதை பார்த்தோம்.

நண்பர்களே,

ஐரோப்பாவின் ‘ஹார்ட்’ இதழில், சுவாரசியமான கட்டுரை ஒன்று கடந்தாண்டு வந்தது. இது ஆக்ஸ்போர்ட் பல்கைலக்கழகம் வெளியிடும் இதயநோய் பிரிவு ஆய்வு இதழ் ஆகும். மற்ற விஷயங்களுக்கு இடையே, இந்த கட்டுரை, கொவிட் தொற்று நேரத்தில் பகவத் கீதை எப்படி மிக பொருத்தமாக இருந்தது என்பது பற்றியும் கூறியது. நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கு சரியான வழிகாட்டி பகவத் கீதை என அதில் கூறப்பட்டிருந்தது. அந்த கட்டுரை, அர்ஜூனனை சுகாதார பணியாளர்களுடனும், மருத்துவமனைகளை வைரசுக்கு எதிரான போரின் போர்களங்களாகவும் ஒப்பிட்டிருந்தது.  அச்சம் மற்றும் சவால்களை கடந்து, தங்கள் கடமையை செய்த சுகாதார பணியாளர்களை இது பாராட்டியது.

நண்பர்களே,

பகவத் கீதையின் முக்கியமான தகவல் செயல்பாடு. நம்மை செயலில் ஈடுபடும்படி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். ஏனென்றால், செயல்படாமல் இருப்பதை விட செயல்படுவது சிறந்தது. 

உண்மையில், செயல்படாமல் நமது உடலை கூட நம்மால் கவனிக்க முடியாது என அவர் கூறினார்.  இன்று, 1.3 பில்லியன் இந்திய மக்கள், தங்கள் செயல்பாட்டை முடிவு செய்துள்ளனர்.  அவர்கள் இந்தியாவை தற்சார்பு இந்தியா ஆக்கப்போகிறார்கள். நீண்ட கால நன்மைக்கு, தற்சார்பு இந்தியா மட்டுமே அனைவருக்கும் நல்லது.  தற்சார்பு இந்தியாவின் முக்கிய அம்சம், நமக்கு மட்டும் அல்ல, ஒட்டு மொத்த மனித இனத்துக்கும்  வளத்தையும் மதிப்பையும் உருவாக்குவதுதான். தற்சார்பு இந்தியா உலகத்துக்கு நல்லது என நாம் நம்புகிறோம். சமீபத்தில், உலகத்துக்கு மருந்துகள் தேவைப்பட்டபோது, இந்தியா முடிந்தளவு வழங்கியது. நமது விஞ்ஞானிகள் விரைந்து செயல்பட்டு தடுப்பூசியை உருவாக்கினர். இந்திய தடுப்பூசி தற்போது உலகம் முழுவதும் செல்கிறது. மனித குலத்துக்கு உதவவும், நன்மை பயக்கவும் நாம் விரும்புகிறோம். இதைத்தான் கீதை நமக்கு கற்பிக்கிறது. 

நண்பர்களே,

எனது இளம் நண்பர்கள், பகவத் கீதையை படிக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். அதன் போதனைகள் முற்றிலும் நடைமுறையுடன் கூடியது மற்றும் தொடர்புடையது.

வேகமான வாழ்க்கையின் நடுவில், கீதை அமைதியான சோலை மற்றும் நிம்மதியை வழங்குகிறது.  இது வாழ்க்கையின் பல பரிமாணங்களுக்கான நடைமுறை வழிகாட்டி. கீதையின் பிரபலமான வசனங்களை நாம் ஒருபோதும் மறக்க கூடாது.

இது தோல்வி பயத்திலிருந்து நமது மனதை விடுவித்து, நமது செயலில் கவனம் செலுத்த வைக்கும். அறிவு யோகா பற்றிய அத்தியாயம் உண்மையான அறிவின் முக்கியத்துவத்தை விவரிக்கிறது. பக்தி யோகா, பக்தியின் முக்கியத்துவத்தை நமக்குக் கற்பிக்கிறது. நேர்மறையான மனநிலையை வளர்த்துக்கொள்ள, ஒவ்வொரு அத்தியாயத்திலும் சில விஷயங்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் ஒவ்வொருவரும், சர்வ வல்லமை மிக்க தெய்வீகத்தின் பொறி என்பதை கீதை மீண்டும் வலியுறுத்துகிறது.

இது சுவாமி விவகோனந்தர் கூறிய விஷயம் போல் உள்ளது. பல கடினமான முடிவுகளை எனது இளம் நண்பர்களும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதுபோன்ற சமயங்களில், நான் அர்ஜூனன் இடத்தில் இருந்தால், இந்த குழப்பத்தை எப்படி எதிர்கொள்வேன், என்னை ஸ்ரீ கிருஷ்ணர் என்ன செய்ய சொல்லியிருப்பார் என நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.  இது அருமையாக வேலை செய்யும். ஏனென்றால்,  நீங்கள் உங்கள் விருப்பு, வெறுப்பு சூழலிலிருந்து விடுபட்டு, பகவத் கீதையை பார்க்கத் தொடங்குவீர்கள்.

இது உங்களை சரியான இடத்துக்கு கொண்டு செல்லும் மற்றும் கடினமான முடிவெடுக்க  எப்போதும் உதவும். சுவாமி சித்பவானந்தா வர்ணனையுடன் கூடிய இந்த மின்னணு பதிப்பு வெளியீட்டுக்கு நான் மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

வணக்கம்.

சுவாமிஜியின் வாழ்க்கை வரலாற்றுக் குறியீடு இது:

சுவாமி சித்பவானந்தர் , மார்ச் 11, 1898 - த ஜனனம் நவம்பர் 16, 1985 ல் சமாதியடைந்தார். ராமகிருஷ்ண குருகுல மரபைச் சேர்ந்த துறவி. ராமகிருஷ்ண தபோவனம் என்ற அமைப்பை 1944 ல் நிறுவினார். அதனூடாக விரிவான கல்விச்சேவைகளையும் நிகழ்த்தினார். பகவத்கீதை, திருவாசகம் போன்ற நூல்களுக்கு புகழ்பெற்ற உரைகளையும் எழுதியிருக்கிறார்.

சித்பவானந்தரின் இயற்பெயர் சின்னுக் கவுண்டர் அவரது குரு ராமகிருஷ்ண பரமஹம்சர்

தமிழ்நாட்டில் கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே செங்குட்டைப்பாளையம்  கிராமத்தில் பி. கே. பெரியண்ணக் கவுண்டர், நஞ்சம்மையார் தம்பதிக்கு மகனாக சித்பவானந்தர் பிறந்தார்  சின்னுக்கவுண்டராகஆத்துப் பொள்ளாச்சி கிராமப் பள்ளியிலும், பொள்ளாச்சி கிராமப்பள்ளியிலும் ஆரம்பக்கல்வியும் . கோயமுத்தூர் ஸ்டேன்ஸ் ஆங்கிலப் பள்ளியில் உயர்நிலைக்  கல்வியும் கற்றார்.

அச்சமயத்தில் பொள்ளாச்சிக்கு வந்த பழனி சாது சுவாமிகள் அறிமுகம்  கிடைத்து. பழனிக்குச் சென்று வர ஆரம்பித்த பின் சட்டிச் சுவாமிகள் அறிமுகமும் வாய்த்தது. 1918- ல் சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் சென்னை மாகாணத்தில் ஏழாமிடம் பெற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் எஃப்.ஏ. வகுப்பில் சேர்ந்தார்.

மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்லும் நிலையில் சுவாமி விவேகானந்தரது "சென்னைச் சொற்பொழிவுகள்" நூலின் கட்டுரையால் கவரப்பட்டு பயணத்தை நிறுத்தினார். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை படித்தார். அப்போது விக்டோரியா விடுதியில் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்களுடன் தோழராகி இருவரும் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்குச் சென்று ஸ்ரீமத் சுவாமி சிவானந்தர், ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்தர் அறிமுகம் பெற்றனர்.

1923-ல் இளங்கலை படிப்பை முடித்ததும் அகிலானந்த சுவாமிகளுடன் புவனேஸ்வரம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சென்று சுவாமி சிவானந்தரிடம் பிரம்மச்சரியத் தீட்சை பெற்று. திரையம்பக சைதன்யர் என்ற பெயருடன் அங்கேயே இருந்தார். சுவாமி சிவானந்தரின் அனுமதி பெற்றுத் தென்னாட்டில் பயணம்செய்து சேரன்மகாதேவியில் தேச பக்தர் வ. வே. சு. ஐயரைச் சந்தித்தார்.

1924 சூன் மாதம் சலவைத் தொழிலாளி ஒருவர் அளித்த தான நிலத்தில் சுவாமி சிவானந்தர் ஊட்டி ஆசிரமத்திற்கு அடிக்கல் நாட்டினார். திரையம்பக சைதன்யரின் குடும்பம் ஆசிரமம் அமைக்க உதவி செய்தனர். 1926 சூலை 25 ல் சுவாமி சிவானந்தர் இவருக்குச் சந்நியாச தீட்சை வழங்கி சுவாமி சித்பவானந்தர் என்று பெயரிட்டார்.

1930 முதல் 1940 வரை உதகை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்தார். அப்போது காந்தியடிகள், நாராயணகுரு ஆகியோர் அங்கே வருகை புரிந்தார்கள். சிவானந்தர் சமாதியடைந்த பின்னர் ராமகிருஷ்ண மடத்திலிருந்து விலகிக் கைலாய யாத்திரை  மேற்கொண்டு திரும்பி 

திருச்சி அருகே திருப்பராய்த்துறைக்குச் சென்று 1940 ல் அகன்ற காவிரியில் நீராடிய சித்பவானந்தர் தாருகாவனேசுவரர் தேவஸ்தான ஆலயத்தில் 1940 ஆம் ஆண்டில் நடந்த குடமுழுக்கு விழாவின் போது ஆலயத்தை 1900 ல் புனர் நிர்மாணம் செய்தும் மீண்டும் இரண்டாம் திருப்பணி செய்த காநாடுகாத்தான் வெ.வீர.நா. அருணாசலம்  செட்டியார் அழைப்பில் பங்கேற்று ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி செய்தவர்   கானாடுகாத்தான் அருணாசலம் செட்டியார் சந்திப்பு  ஏற்படவே அங்கேயே விடுதியில்  திருப்பராய்த்துறையில் தங்க  முடிவெடுத்தார். செட்டியார் உதவ நூற்றுக்கால் மண்டபத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்றைத்  ஆரம்பித்தார். அதற்கு இடமும் பொருளும் செட்டியார் வழங்க திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில் வாரம் ஒருமுறை தாயுமானவர் பாடலுக்கு விளக்கம் அளித்தார்.

1942-ல் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தை துவங்க செட்டியார் உதவ நிறுவினார். குருகுல முறையில் விவேகானந்த வித்யாவன நடுநிலைப் பள்ளி மற்றும் விவேகானந்த மாணவர் விடுதி ஆகியவற்றைத் தொடங்கினார். உள்ளூர் மாணவர்களுக்காகத் திருப்பராய்த்துறையில் நடுநிலைப் பள்ளி தொடங்கினார். 1951 ல் தர்ம சக்கரம் மாத இதழை ஆரம்பித்தார். தொடர்ந்து பல கல்வி நிறுவனங்களையும் ஆரம்பித்தார்.

சேலத்தில் சாரதா வித்யாலயா பெண்கள் பள்ளி, விவேகானந்த ஆசிரியர் கல்லூரி ஆகியவை ஆரம்பிக்கப்பட்டன. 1964 ல் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகத்தில் ராமகிருஷ்ண ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்டது. கோயமுத்தூர் மாவட்டம் சித்திரச் சாவடியில் கிளை ஆரம்பிக்கப்பட்டது. 1967 இல் தமிழகத்தில் பெண்களுக்கெனத் துறவுத் தொண்டு நிறுவனமாக சேலத்தில் சாரதா தேவி சமிதி தொடங்கப்பட்டது. 1971-ல் திருவேடகத்தில் விவேகானந்த குருகுலக் கல்லூரி அமைத்து ஆன்மீகத் தோண்டு செய்து

மறைந்தார் சுவாமிஜி. இவரது சகோதரர் மகன் தான்  முன்னால் ஆளுநர் சி. சுப்பிரமணியம் ஆகும்.பகவத் கீதையின், 19வது பதிப்பு ஆங்கில இ – புத்தகத்தை, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் வெளியிட்டார்,”  திருச்சி, திருப்பராய்த்துறை சுவாமி சித்பவானந்தர், பகவத் கீதைக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்க உரைகளை எழுதினார். இந்த இரண்டு புத்தகங்களிலும், 19 பதிப்புகள் வெளியாகி உள்ளன.அதில், ஆங்கில பதிப்பின் விளக்க உரை இ – புத்தகத்தை, பிரதமர் மோடி  காலை, 10:30 மணிக்கு காணொலி காட்சி மூலம் வெளியிட்டார். நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை, உலகம் முழுதும், 10 லட்சம் பேர் கண்டனர் என, இந்நிகழ்ச்சி, இணைய வழி மூலம், கரூர் சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லுாரி சார்பில், தொகுத்து வழங்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...