மத்திய அமைச்சரவை சுகாதாரம் மற்றும் கல்வி மேல்வரி வருவாய் மூலம் கிடைக்கும் நிதியிலிருந்து சுகாதாரத்திற்கு காலாவதியாகாத ஒற்றைத் தொகுப்பு வைப்பு நிதியான பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்ஷா நிதியை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சுகாதாரம் மற்றும் கல்விக்கான மேல்வரி வருவாய் மூலம் கிடைக்கும் நிதியில் இருந்து நிதிச் சட்டம் 2007-ன் 136-பி பிரிவின் கீழ் சுகாதாரத்தின் பங்காக காலாவதியாகாத ஒற்றைத் தொகுப்பு வைப்புநிதியான பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்ஷா நிதியை உருவாக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்ஷா நிதியின் முக்கிய அம்சங்கள்:
i. சுகாதாரத்திற்கான காலாவதியாகாத ஒற்றைத் தொகுப்பு வைப்புநிதி பொது கணக்கில் உருவாக்கப்படும்
ii. சுகாதாரம் மற்றும் கல்விக்கான மேல்வரி வருவாய் மூலம் கிடைக்கும் நிதியில் சுகாதாரத்தில் பங்கு, பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்ஷா நிதியின் கணக்கில் சேர்க்கப்படும்
iii. பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்ஷா நிதியில் சேர்க்கப்படும் தொகை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ்க்காணும் முக்கிய திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்:
• ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம்
• ஆயுஷ்மான் பாரத்- சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள்
• தேசிய சுகாதார இயக்கம்
• பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்ஷா திட்டம்
• மருத்துவ அவசர காலங்களின் போது அவசரகால மற்றும் பேரிடர் தயார் நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்
• நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் தேசிய சுகாதார கொள்கை 2017-இன் இலக்குகளை முன்னெடுத்து செல்வதற்கான எதிர்கால திட்டங்கள்
iv. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் இந்தத் தொகுப்பின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளப்படும்
v. எந்த நிதி ஆண்டிலும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்கான செலவினங்கள் முதலில் இந்த வைப்பு நிதியிலிருந்தும், அதன்பிறகு ஒட்டுமொத்த நிதிநிலை ஆதரவிலிருந்தும் வழங்கப்படும்.
பயன்கள்:
ஒதுக்கப்பட்ட தொகை, நிதி ஆண்டின் முடிவிற்குள் காலாவதியாகாததை உறுதிசெய்து, ஒதுக்கப்பட்ட வளங்களின் இருப்பைக் கொண்டு அனைவருக்கும் கிடைக்கும் வகையில் சர்வதேச தரத்திலான மருத்துவ சேவையை வழங்குவது இதன் முக்கிய பயனாகும்.
கருத்துகள்