முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மதுரை சித்திரை திருவிழா ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம்

 உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மதுரை சித்திரை திருவிழா.








ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், திருத்தேர் உலா மற்றும் நவராட்த்திரி, ஆவணி மூல திருவிழா, தை தெப்பத் திருவிழா, ஆடிப்பூரம் என பல்வேறு விஷேச நாட்களில் மிகச் சிறப்பாக கொண்டாட்டம்

சுந்தரேஸ்வரருக்கு கருவரை மேல் உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது. இந்திரனுக்கு நேர்ந்த கொலை பாவத்தை போக்கும் பொருட்டு பல தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தான். சிவ பெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய கடம்ப வனமான மதுரையில் சுயம்பு லிங்கமாக இருப்பதை தரிசித்த இந்திரன் பாவ விமோசனம் பெற்றார்.

இதனால் இந்திரன் இங்கு விமானத்துடன் கூடிய பெருங்கோயிலை எழுப்ப அது இந்திரன் விமானம் ஆகும் ஸ்ரீ மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக் கல்லால் ஆனது. மதுரைக்கு வந்த மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்றும், இந்த ஸ்லத்தினை பூலோக கைலாசம் எனவும் அழைக்கப்படுகின்றது.


மதுரையை ஆண்ட மன்னர் ராஜசேகர பாண்டியன் நடனம் கற்று வந்தார். அவர் சுவாமியை தரிசித்த போது, “இறைவா நான் நடனம் கற்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன். ஆனால் காலம் காலமாக வலதுகால் ஊன்றி, இடதுகால் தூக்கி ஆடுகின்றாயே. எனக்காக இடது கால் ஊன்றி வலது கால் தூக்கி, கால் மாறி ஆடக் கூடாதா?... அப்படி நீ இதை செய்யாவிட்டால் நான் என் உயிரை இங்கேயே துறப்பேன்” என்றதும்

மன்னனின் வேண்டுகோளை ஏற்ற நடராஜர் தன் இடது காலை ஊன்றி, வலது கால் தூக்கி ஆடியருளினார். நடராஜர் இருக்கும் இடம் பஞ்ச சபைகளுள் ஒன்றான வெள்ளி சபையாகும்.

நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுகோளின்படி, ஈசன் தன் சூலாயுதத்தால் பூமியில் ஊன்றி உருவாக்கியது இந்த பொற்றாமரைக்குளம். மேலும் இந்திரன் தான் பூஜிப்பதற்காகப் பொன்னால் ஆன தாமரையைப் பெற்ற ஸ்தலம். இந்த குளத்திற்கு சிவகங்கைகுளம் என்றும் பெயர்.

இந்த குளத்தில் அமாவாசை, கிரகண காலம், மாதப் பிறப்பு உள்ளிட்ட புண்ணிய நாட்களில் நீராடி சுவாமியை தரிசித்தல் வேண்டும்.

ஈசனை மனமுருகிப் பாடிய தேவாரப்பாடலால் பாடப்பெற்ற 274 சிவாலயங்களில் இது 192 வது தேவார ஸ்தலம் ஆகும். அதே போல் 51 வது சக்தி பீடம்

கோயிலிலுள்ள கோபுரங்கள் சங்க காலத்திற்கு முன்பே கட்டப்பட்டது.  சுமார் 2300 முதல் 3600 ஆண்டுகளுக்கு முன்.அதன் பின்னர் கோயிலில் உள்ள ஒவ்வொரு கோபுரமும் 1168 ஆண்டு முதல் 1175 ஆண்டு வரை சுவாமி கோபுரம் 1216 ஆண்டு முதல் 1228 ஆண்டு வரை கிழக்கு ராஜ கோபுரம் 1627 ஆண்டு முதல் 1628 ஆண்டு வரை அம்மன் சன்னதி கோபுரம் 1315 ஆண்டு முதல் 1347 ஆண்டு வரை மேற்கு இராஜ கோபுரம் 1372 ஆண்டு : சுவாமி சன்னதி கோபுரம் 1374 ஆண்டு : சுவாமி சன்னதி மேலக்கோபுரம் 1452 ஆண்டு : ஆறுகால் மண்டபம் 1526 ஆண்டு : 100 கால் மண்டபம் 1559 ஆண்டு : தெற்கு ராஜ கோபுரம் முக்குருணி விநாயகர் கோபுரம் 1560 ஆண்டு: சுவாமி சன்னதி வடக்குக்கோபுரம் 1562 ஆண்டு : தேரடி மண்டபம் 1563 ஆண்டு : பழைய ஊஞ்சல் மண்டபம், வன்னியடி நடராஜர் மண்டபம் 1554-72 வடக்கு ராஜ கோபுரம் 1564 - 72 வெள்ளிக் அம்பாள் மண்டபம் கொலு மண்டபம் 1569 ஆண்டு : இதர கோபுரம் ஆயிரங்கால் மண்டபம் 53 நாயன்மார்கள் மண்டபம் 1570 ஆண்டு : அம்மன் சன்னதி மேற்கு கோபுரம் 1611 ஆண்டு :வீர வசந்தராயர் மண்டபம் 1513 ஆண்டு : இருட்டு மண்டபம் 1623 ஆண்டு : கிளிக்கூட்டு மண்டபம், புது ஊஞ்சல் மண்டபம் 1623 - 59 ஆண்டு : ராயர் கோபுரம், அஷ்ட சக்தி மண்டபம் 1626 -45 ஆண்டு : புது மண்டபம் 1535 ஆண்டு : நகரா மண்டபம் 1645 ஆண்டு முக்குருணி விநாயகர் 1659 ஆண்டு : பேச்சியம்மாள் மண்டபம் 1708 ஆண்டு : மீனாட்சி நாயக்கர் மண்டபம் 1795 ஆண்டு : சேர்வைக்காரர் மண்டபம் ஆயிரங்கால் மண்டபம்: கோயிலின் சுவாமி சன்னதிக்கு இடது புறத்தில் உள்ளது ஆயிரங்கால் மண்டபம். கோயிலின் மற்ற மண்டபங்களை விட மிக பிரமாண்டமாக அளவின் பெரிதாக காணப்படுகின்றது. இதனை 1494 ஆம் ஆண்டில் மதுரையை ஆண்ட முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவரின் அமைச்சரும் தளவாய் பிரதானி அரியநாத முதலியாரால் அமைக்கப்பட்ட மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் என அழைக்கப்பட்டாலும் உள்ளே 985 தூண்கள் மட்டும் உள்ளன. இதில் 22 தூண் இசை எழுப்பக்கூடிய சிறிய தூண்கள் உள்ளன. இருப்பினும் தூண் சேதமடைந்துவிடக் கூடாது என்பதற்காக பாதுகாக்கப்பட்டு வருகின்றது ஸ்ரீ

ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோலில் சில உப சன்னதிகளைக் கட்ட மன்னர் திருமலை நாயக்கர் முடிவு செய்து, ஊருக்கு வெளியே வண்டியூர் பகுதியில் எடுத்த பின் அது தெப்பக்குளமாக உள்ளது. இங்குமண் எடுக்கும் போது இந்த முக்குறுணி விநாயகரை கண்டு கிடைத்தது.

அதை  கோவிலிலேயே ஸ்ரீ மீனாட்சி சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு இடையே கிளிகூண்டு மண்டபத்துக்கு வடக்கு பகுதியில் தனி சன்னதியில்  வைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி தினத்தில் மிக சிறப்பாக இந்த விநாயகர்  கொண்டாடப்படுகின்றார்

மாசி முதல் ஆடி வரை ஆறு மாதம் அம்பாள் ஸ்ரீ மீனாட்சி ஆட்சி நடைபெறும். ஆவணியில் ஆட்சி பொறுப்பேற்கும் சுந்தரரேஸ்வரர் மாசி மாதம் வரை ஆட்சி நடத்துவார். மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மாசித் திருவிழா சித்திரைக்கு மாற்றப்பட்டு, அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா அத்துடன் இணைக்கப்பட்டது. அதனால் தான்,சைவ  வைணவக் கலப்பு காரணமாக  ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் தற்போது சித்திரையில் நடக்கிறது.

சித்திரை திருவிழா இந்தாண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றதில். எட்டாம் நாளில் காலை ஊடல் லீலை நடைபெற்றது. அன்றிரவு அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

பரிவட்டம், வேப்பம்பூ மாலை ஸ்ரீ

ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கு பாண்டிய பட்டத்து அரசியாக முடி சூட்டுவதற்காக ராயர் கிரீடம் எனப்படும் வைரக் கிரீடம் அனுக்ஞை விநாயகர் சந்நிதியிலிருந்து செங்கோலும் கொண்டு வரப்படும். அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, கிரீடம் சூட்டப்பட்டு கையில் செங்கோல் தரப்படும். பின்னர் மீனாட்சிக்கு உரிய வேப்பம்பூ மாலையும் மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்படும்

பல்லாக்கு குதிரையில் பவனி வரும் ஸ்ரீ மீனாட்சி பட்டம் சூடிய ஸ்ரீ மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தருவார். அவருடன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், வெள்ளி சிம்மாசனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். கொரோனா காலம் என்பதால் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா வரும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. உள் புறப்பாடு நடைபெறும் போது பக்தர்கள் தரிசிக்க அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.தினம் தினம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடை அம்மனுடன் ஆடி வீதிளில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஒன்பதாம் நாளன்று திக் விஜயமும் நடைபெற்றது.

பத்தாம் நாளான இன்றைய தினம் மிக முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம் என்றாலே லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள். கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் மீனாட்சி திருக்கல்யாணத்தை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. திருக்கல்யாணம் முடிந்து தம்பதி சமேதராக அருள்பாலித்த மீனாட்சி சுந்தரேஸ்வரரை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண உற்சவம்

கோவிலில் உள்ள சேத்தி மண்டபத்தில் நடைபெற்றது. இதற்காக பல வண்ண மலர்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் உற்சவர் சன்னதியில் இருக்கும் திருவாட்சியில் உள்ள 108 விளக்குகள் ஏற்றப்பட்டன. மீனாட்சி அம்மன் மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டார்.புது மணத்தம்பதிகள்

பட்டுப்புடவை உடுத்தி மணப்பெண்ணாய் காட்சி அளித்தார் மதுரை ஸ்ரீ மீனாட்சி வைரகிரீடம் சூடி, மரகத மூக்குத்தி, வைர மாலை மற்றும் பல வண்ண கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டன. சுந்தரேசுவர பெருமான் வெண்பட்டும், பிரியாவிடை சிவப்பு பட்டும் உடுத்தி மன்னர் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் வழங்ககய கிரீடம் சூடி மணமேடையில் எழுந்தருளினர். பரிவட்டம் காட்டிய படி அந்தண பட்டர்கள்  மணமேடையில் அக்னி வளர்த்து வேதமந்திரங்கள் முழங்க திருமணச் சடங்குகளைச் செய்தனர். அதைத் தொடர்ந்து சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடந்தது. பின்னர் சுந்தரேசுவரர் பிரதிநிதியாக ஒரு பட்டரும், ஸ்ரீ மீனாட்சியின் பிரதிநிதியாக மற்றொரு பட்டரும் மாலை மாற்றிக் கொண்டனர். சுந்தரேசுவரருக்கு வெண்பட்டால் ஆன பரிவட்டமும், அம்மனுக்கு பட்டுப் புடவையால் ஆன பரிவட்டமும் கட்டப்பட்டன.

முப்பத்து முக்கோடி தேவர்கள் அன்னையின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஆண்டு தோறும் திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணியசுவாமி, தேவயானி சகிதம், பவளவாய் கனி பெருமாள் ஆகியோர் எழுந்தருளுவார்கள். இந்திரன், குபேரன் உள்ளிட்ட தேவர்கள் புடை சூழ, பவளவாய் கனி பெருமாள், தனது தங்கை மீனாட்சியை தாரைவார்த்துக் கொடுத்து திருமணம் செய்து வைப்பார். இந்த ஆண்டு பவளக்கனிவாய் பெருமாளும், சுப்ரமணிய சுவாமியில் மதுரைக்கு வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...