கொவிட்-19 ஐ துல்லியமாகவும் மதிப்பீடு செய்ய எலிசா மின் வேதியியல் சோதனை


அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட்-19 இன் மொத்த எதிர்ப்பொருள் செறிவை விரைவாகவும் துல்லியமாகவும் மதிப்பீடு செய்ய எலிசா மின் வேதியியல் சோதனை

மருத்துவ மாதிரிகளில் கொவிட்-19 இன் மொத்த எதிர்ப்பொருள் செறிவை விரைவாகவும் துல்லியமாகவும் மதிப்பீடு செய்யும் எலிசா என்ற மின் வேதியியல் சோதனையை பெங்களூரைச் சேர்ந்த ஓர் புதுமை நிறுவனம்  உருவாக்கியுள்ளது.

இந்திய அறிவியல் கழகம், புதுமை மற்றும் மேம்பாட்டுக்கான சங்கத்தால்  தொடங்கப்பட்ட பாத்ஷோத் சுகாதார மையம் என்ற புதுமை நிறுவனம், முதன்முறையாக கொவிட்-19 தொற்றின் ஐஜிஎம் மற்றும் ஐஜிஜி எதிர்ப்பொருட்களுக்கான அரை அளவிற்குரிய மின் வேதியியல் எலிசா பரிசோதனையை தயாரித்துள்ளது. தரமான பகுப்பாய்வு, மாதிரியில் உள்ள கூறுகளைக் கண்டறிந்தாலும், அரை அளவிற்குரிய பகுப்பாய்வு, அவற்றின் செறிவுகளின் தோராயமான மதிப்பீட்டை வழங்குகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் பரிந்துரைகளின்படி ஃபரிதாபாத்தைச் சேர்ந்த டிரான்ஸ்நேஷனல் சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (டிஹெச்எஸ்டிஐ) சரிபார்த்தலுக்குப் பிறகு, இந்தப் பரிசோதனையை விற்பனை  செய்வதற்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம், பாத்ஷோத் புதுமை நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியுள்ளது.

கொவிட்-19 சுகாதார நெருக்கடியில் புதுமை கண்டுபிடிப்புகளை  மேம்படுத்துவதற்கான மையத்தின் கீழ் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இந்த புதிய தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பிற்கு ஆதரவு அளித்தது.

சார்ஸ் வைரஸின் ஸ்பைக் கிளைக்கோ ப்ரோட்டீனில்  (எஸ்1) உள்ள எதிர்ப்பொருட்களின் மின் வேதியியல் நடவடிக்கைகள் அளவீடுகளின் அடிப்படையில் இந்த புதிய தொழில்நுட்பம் அமைந்துள்ளது. அமெரிக்க மற்றும் இந்திய காப்புரிமை வாயிலாக இந்தத் தொழில்நுட்பம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

எதிர்ப் பொருட்களின் தற்காலிக சிதைவை மதிப்பிடுவதில், கொவிட்-19 எதிர்ப்பொருள் செறிவை அளவிடுவதற்கான திறன் மிகவும் முக்கியமானதாக இருக்கும், எனவே நோய்த்தொற்று மீண்டும் வருவதற்கு எதிராக நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும் என்றும், எதிர்காலத்தில் தடுப்பூசித் திட்டங்களிலும் இந்த நுட்பமுறை மிக முக்கிய பங்கு வகிக்கும் என்றும் பாத்ஷோத்  சுகாதார மையத்தின் இணை நிறுவனரும், இந்திய அறிவியல் கழகத்தின் நானோ அறிவியல் மற்றும் பொறியியல் மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் நவகண்டா பட் தெரிவித்தார்.

இந்தப் பரிசோதனைக் கருவியில் இடம்பெற்றுள்ள பரிசோதனைப் பட்டையில் ஒருவரது விரல் நுனியில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தத் துளிகளை செலுத்திய பிறகு, கையடக்கக் கருவியில் 5 நிமிடங்களில் முடிவைத் தெரிந்து கொள்வதுடன், அதனை செல்பேசியில் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். சுமார் ஒரு லட்சம் பரிசோதனை முடிவுகளை சேமிக்கும் வசதி, தொடு திரை, மின்னூட்டம் வசதியுடன் கூடிய மின்கலன், ப்ளூடூத் வசதி, நோயாளியின் தரவை ஆதார் எண்ணுடன்  இணைத்தல், ஆரோக்கிய சேது செயலியின் வாயிலாக பரிசோதனை முடிவுகளை இணைப்பதற்கான வாய்ப்பு போன்ற தனித்துவம் வாய்ந்த அம்சங்களை இந்தத் தொழில்நுட்பம் பெற்றுள்ளது.

செரோ ஆய்வின் சாதனமாக மட்டுமல்லாமல்,  எதிர்ப்பொருள் தன்மை இழப்பதின் வீதம், எதிர்ப்பொருட்களை உருவாக்குவதில் தடுப்பூசியின் செயல்திறன், தடுப்பூசிகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளை மேற்கொள்ளவும் இந்த பரிசோதனை உதவிகரமாக இருக்கும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் ஷர்மா கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா