எரிசக்தி அமைச்சகம் கொவிட்-19 தடுப்பு மருந்து முகாமை பெங்களூரில் பவர்கிரிட் ஏற்பாடு செய்தது
இந்திய அரசின் மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட், தனது பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரை கொவிட்-19 பெருந்தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக தடுப்பு மருந்து வழங்குதல் முகாம்களை நாடு முழுவதும் அதிக அளவில் நடத்தி வருகிறது.
நிறுவனத்தின் அனைத்து மையங்களிலும் தடுப்பு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மண்டல தலைமையகம், எலஹங்கா துணை மின் நிலையம், மற்றும் இதர பிரிவுகளின் பணியாளர்கள், அவர்களை சார்ந்துள்ள மற்றும் சார்ந்திராத குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முன்கள பணியாளர்களின் நலனுக்காக பெங்களூருவில் உள்ள தெற்கு மண்டலம்-II மண்டல அலுவலகத்தில் தடுப்பு மருந்து வழங்கும் முகாம் நடத்தப்பட்டது.
பெங்களூரில் உள்ள மணிபால் மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 200 டோஸ்கள் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.
கருத்துகள்