2017 முதல் 2019 வரை பதிவினை புதுப்பிக்க தவறிய நபர்கள் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்புபதிவினை புதுப்பிக்கலாம்.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை பதிவினை புதுப்பிக்க தவறிய நபர்கள் ஆன்லைன் மூலம் பதிவினை புதுப்பிக்க ஏற்பாடு.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் வருகிற ஜூன் 24 ஆம் தேதிக்குள், புதுப்பிக்லாம் என  தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு.

இணையதளம் மூலமும் புதுப்பித்துக்கொள்ளலாம் எனத் தகவல். வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழகத்தில் வேலை வேண்டி அரசின் வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்துள்ளவர்கள், க 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில், மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வசதியாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு அளித்துள்ள படி புதுப்பித்தல் சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரர்கள் ஜுன் மாதம். 24 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது உரிய வேலைவாய்ப்புத் துறை அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் www.tnvelaivaaippu.gov.in/empower என்ற இணையதள முகவரி வாயிலாகவும் புதுப்பிக்கலாம்.

இவ்வாறு  வேலைவாய்ப்பு பயிற்சித்துறை ஆணையர் ஜோதிநிர்மலா குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா