இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா,சுமார் ரூ.30 லட்சம் செலவில் போட்டிகளில் பங்கேற்க ‘டாப்ஸ்’ அனுமதி
இந்திய டென்னிஸ் இரட்டையர் பிரிவில் பங்கேற்கும் வீரர் ரோகன் போபண்ணா, 2021 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 11 போட்டிகளில் தனது பயிற்சியாளர் ஸ்காட் டேவிட், உடற்பயிற்சியாளர் கவுரங் சுக்லா ஆகியோருடன் பங்கேற்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தார்.
இதற்கு இன்று நடந்த கூட்டத்தில் ‘டாப்ஸ்’ (ஒலிம்பிக் பிரிவு) ஒப்புதல் அளித்தது.
டென்னிஸ் வீரர்களில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா தற்போது உலக தரவரிசையில் 39வது இடத்தில் உள்ளார். இவர் 2016ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக்ஸ் அரையிறுதி போட்டியிலும் பங்கேற்றார். இவர் தனது போட்டிகளில் பங்கேற்பதற்கு சுமார் ரூ.27.61 லட்சம் அனுமதிக்கப்பட்டது.
நடப்பு ஒலிம்பிக் சுற்று மூலம், ரோகன் போன்னா, டாப்ஸிலிருந்து (டார்கெட் ஒலிம்பிக் போடியம் ஸ்கீம்) ஏற்கனவே ரூ.1.24 கோடி பெற்றுள்ளார்.
கருத்துகள்